New Register   -  Login     
TamilMozhi.com - Astrology
 - தமிழ்மொழி முகப்பு » ஜோதிடம் » வேத ஜோதிடம் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
 விருச்சகம் உங்கள் லக்கினம்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம், ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். நீங்கள் கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர். உங்கள் காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைக்கூட நீங்கள் பேசமாட்டீர்கள். மற்றவர்களின் எண்ணத்தை, உங்களால் மதிப்பிட முடிகிறது. ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம் ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், முன்னுக்கு வரக்கூடியவர். நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர் சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர் வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். முளை நோயினால் நீங்கள் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை, உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் அழகை ரசிப்பவர் சிற்றின்பப்பிரியர் நீங்கள் நடைமுறை ரீதியில் செயல்படுபவர் எதுவுமே நிரூபிக்கப்படாதவரை நீங்கள் அதனை நம்புவதில்லை. நீங்கள் பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது. நீங்கள் திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரர்.
 
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later