| |
| |
| |
|
| |
| லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான். |
| லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான். |
| செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும். |
| பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான். |
| 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான். |
| ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான். |
| 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான். |
| சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான். |
| குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான். |
| சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான். |
| தொடர்ச்சி... |