New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 12 - பகல் - EXT. / INT. - அபிதா வீடு.

லாங் ஷாட்- டாப் ஆங்கிள் - குதிரை வண்டி வருகிறது. அபிதாவின் வீட்டு வாசலில் நிற்கிறது அதிலிருந்து அபிதாவின் அக்கா இறங்குகிறாள் வீட்டுக்குள்ளிருந்து அபிதா 'அக்கா' என்றபடி ஓடிவருகிறாள்.

குளோஸ் ஷாட் - அபிதா : அக்கா.கண்ணன் வரல...?

பதில் சொல்லாமல் அழுதபடி வீட்டுக்குள் ஓடுகிறாள் அக்கா. புரியாமல் பார்க்கிறாள் அபிதா. குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா அழுகிறாள். அருகில் அபிதா. மிட் ஷாட் - அழுகின்ற அக்காவைத் தேற்றியபடி அபிதா அமர்ந்திருக்க அருகில் அம்பி நிற்கிறான். குருக்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

குருக்கள் : நாலாயிரம் ஐயாயிரம் போயி இப்போ நாற்பது ஆயிரத்திலே வந்து நிற்குறாரோ... பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு. இதோ பாரும்மா, உன் தோப்பனார் ஒண்ணும் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் இல்ல... சாதாரண... குருக்கள். அதை மனசுலே வச்சுண்டு பேசு.

குளோஸ் ஷாட் - அக்கா : அவா கேப்பா எவ்வளவு வேணாலும். நம்ம ஆத்துல அதெல்லாம் முடியாதுன்னு நோக்கு மட்டும் தெரியாதா?

அழுகிறாள்.

குளோஸ் ஷாட் - குருக்கள் : தெரிஞ்சுண்டே என் பிராணனை வாங்கணுமுன்னு வந்து நிக்கிற போல இருக்கு...

கண் கலங்குகிறார். குளோஸ் ஷாட் - அபிதா கலக்கத்துடன் அப்பாவைப் பார்க்கிறாள். அருகில் அழுதபடி அக்கா.

குளோஸ் ஷாட் - சஜஷன் குருக்கள்

அம்பி : சரி மாமா, நம்ம மேலே என்ன தப்பிருக்கு? அதுதான் கொடுக்க வேண்டியது எல்லாம் கொடுத்து முடிச்சாச்சே... இப்போ பணத்துக்காக பெத்தவகிட்டேயிருந்து பிள்ளையைக் கூடவா பிடுங்கிண்டு அனுப்புவா...? இதை இப்படியே விடக் கூடாது. ரெண்டுலே ஒண்ணு கேட்டுறணும்.

குளோஸ் ஷாட்- அக்கா : வேண்டாம். நான் ஒரு முடிவோடத்தான வந்திருக்கேன். குளோஸ் ஷாட் – குருக்கள் அதிர்ச்சியாக நிமிர்கிறார்.

குளோஸ் ஷாட் - அக்கா : எனக்கு இப்படிப்பட்ட மனுஷனோட குடித்தனம் பண்ண என்னாலே முடியாது.

குளோஸ் ஷாட் - குருக்கள் முகத்தில் அதிர்ச்சி.

குளோஸ் ஷாட் - அக்கா: இங்கேயே இருந்து உனக்கு சிசுருட்ஷை பண்ணி புண்ணியமாவது தேடிக்கிறேன்.

குளோஸ் ஷாட் - குருக்கள் முகத்தில் அதிர்ச்சி.

குளோஸ் ஷாட் - அக்கா : ஒரு பத்து நாள்ல நானே பணத்தை ஏற்பாடு பண்ணி... அவா முகத்திலே வீசி எறிஞ்சிட்டு என் பிள்ளையை நான் அழைச்சுண்டு வந்துறப்போறேன்.

குளோஸ் ஷாட் - குருக்கள் : இங்க யாரண்ட நீ கேட்க முடியும்...?

குளோஸ் ஷாட் - அக்கா : கேட்போம்... கேட்டுத்தான் பார்ப்போம். மனுஷாளுக்கு மனுஷா உதவி செய்ய மாட்டாளா என்ன...?

குளோஸ் ஷாட்- குருக்கள் : ஆ...:கேட்டவுடனே கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பா...

மிட் ஷாட் - குருக்கள் : எல்லாம் என்தலையெழுத்து

குருக்கள் நொந்துகொண்டே எழுந்து போகிறார்.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later