திரைக்கதை - சேது
காட்சி 13 பகல் - INT,/ கல்லூரி வகுப்பறை
லாங் ஷாட் - ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
ஆசிரியர் : காணின் குவளை... குவளையுன்னா அது ஒரு வகையான மலர்... இந்தக் குளம் குட்டையிலே எல்லாம் இருக்கும்...
குளோஸ் ஷாட் - வகுப்பறையில் இருக்கும் சேது பாடத்தைக் கவனிக்கிறான்.
மிட் ஷாட் - ஆசிரியர் : அதெல்லாம் நீங்க பார்த்திருப்பீங்க... கவிழ்ந்து நிலன் நோக்கும்... அது இப்படி தலையைக் கவிழ்த்துக்கிட்டு நிலத்தைப் பார்க்குதுல்ல...?
மிட்ஷாட் - மாணவ, மாணவிகள் - சஜஷன்
ஆசிரியர் - ஆசிரியர் குரல் (Overlap) : அதுதான் கவிழ்ந்து நிலன் நோக்கும். அது அப்படி இருக்கிறதுக்கும் ஒரு காரணம் இருக்காம்.
குளோஸ் ஷாட் - ஆசிரியர் : அந்தப் பக்கமா போன யாரையோ பார்த்து வெட்கப்பட்டுத்தான் தலையைக் குனிஞ்சதா வள்ளுவர் சொல்றார்.
குளோஸ் ஷாட் - சேது பாடத்தைக் கவனிக்கிறான்.
குளோஸ் ஷாட் - ஆசிரியர் : அப்படி யாரைப் பார்த்து வெட்கப்பட்டிருக்கமுன்னு நினைக்கிறே...?
குளோஸ் ஷாட் - சஜஷன் ஆசிரியர் - சேதுவின் நண்பன் : நான் அந்தப் பக்கம் போகவே இல்லை சார்...
மிட் ஷாட் - ஆசிரியர் : பேசும்போது நல்லா இலக்கணமாப் பேசு... எழுதும்போது கோட்டை விட்டுரு.. கவனி...
குளோஸ் ஷாட் - மாணவர்கள்.
மிட் ஷாட் - ஆசிரியர் : அந்த மலர் ஏன் அப்படி தலையைக் கவுந்துச்சுன்னா மாண் இழை கண் ஒவ்வேம் என்று...
குளோஸ் ஷாட் - சேது ஆர்வமாக கவனிக்கிறான்.
மிட் ஷாட் - ஆசிரியர் : அழகிய மான் போன்ற மிரட்சியான கண்களையுடைய ஒரு பெண்...
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பன்.
மிட் ஷாட் - ஆசிரியர் : அந்தப் பக்கமா அப்படியே போறா... அவளைப் பார்த்துட்டு அந்த மலர்... அடடா இதுவரைக்கும் உலகத்திலேயே நாமதான் அழகுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்தப் பொண்ணோட கண்ணு நம்மளைவிட அழகா இருக்கேன்று வேதனைப்பட்டு கூனிக்குறுகி...
குளோஸ் ஷாட் - நண்பன் : பயங்கரமான ஆளா இருப்பான் போல இருக்கே....
சேதுவிடம் நண்பன் சொல்ல 'ஷ்' என்று அவனை அதட்டுகிறான் சேது.
குளோஸ் ஷாட் - ஆசிரியர் : அவமானம் தாங்காமதான் தலையை குனிஞ்சதா வள்ளுவர் சொல்றாரு...
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பன்: தூள் வாத்தியாரே.....
முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சேதுவின் நண்பன் ஆசிரியரைக் கிண்டல் செய்ய, அவன் முதுகில் உதைக்கிறான் சேது.
குளோஸ் ஷாட் - உதை வாங்கிய நண்பன் சேதுவைத் திரும்பிப் பார்க்கிறான் ஆசிரியரும் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - சேது : என்ன...?
மிட் ஷாட் - ஆசிரியர் : ம்... அதுதான்... அது அதுக்கு ஆள் வேணும்... நான் சொன்னாக் கேட்பியா...?
குளோஸ் ஷாட் - அடி வாங்கியவன் தலைகுனிகிறான். குளோஸ் ஷாட் - சேது பாடத்தைக் கவனிக்கிறான்.
மிட் ஷாட் - ஆசிரியர் : காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாண் இழை கண் ஒவ்வேம் என்று.
குளோஸ் ஷாட் - சேது அபிதாவை நினைக்கிறான். குளோஸ் ஷாட் - சேது. ஃப்ளாஷ் கட்ஸ் அபிதா - சேது - அபிதா.
காட்சி - 14 - இரவு - INT./ சேது வீடு.
குளோஸ் ஷாட் - வீட்டில் படுத்திருக்கும் சேது அபிதாவின் ஞாபகம் வந்தவனாக திடீரென எழுகிறான். மிட் ஷாட் - மாடியிலிருந்து இறங்கி வந்து ஒரு பெட்டியைத் திறந்து துணிகளை எடுத்துக் கீழே போட்டுவிட்டு எதையோ தேடுகிறான். குளோஸ் ஷாட் - பெட்டியிலிருந்து ஒரு சட்டையைத் தேடி எடுக்கிறான். சட்டைப் பாக்கெட்டிலிருந்து (அபிதா நோட்டிலிருந்த) மயில் இறகை எடுக்கிறான். விரல்களால் அதனை வருடுகிறான். குளோஸ் ஷாட் - Inter Cut - வீட்டில் படுத்திருக்கும் அபிதா அசைகிறாள்.
மிட் ஷாட் - அண்ணி எழுந்நது வந்து சேதுவைப் பார்க்கிறாள். லைட்டைப் போட்டுவிட்டு அவன் அருகில் வருகிறாள்.
அண்ணி : என்னடா பண்றே....?
சேது : என்ன...? ஒண்ணுமில்ல... போய்த் தூங்கு....
மயிலிறகை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மாடிக்குப் போகிறான் சேது. |