New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 15 - காலை - EXT. / INT. சேது வீடு.

குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் தலையில் முண்டாசு கட்டியபடி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.

குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் அங்கே வருகின்றனர்.

குளோஸ் ஷாட் - அண்ணன் : யாரும்மா....?

குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் அவர் அருகில் வருகின்றனர்.

குளோஸ் ஷாட் - அண்ணன்.

குளோஸ் ஷாட் - தோழி : சார் இருக்காங்களா...?

குளோஸ் ஷாட் - அண்ணன் : நான்தான்... நான்தான்... சொல்லுங்க...

குளோஸ் ஷாட் - தோழி : இல்லை... சிய்யான் சார்....

குளோஸ் ஷாட் - அண்ணன் : இருக்கான். என்ன விஷயம்?

குளோஸ் ஷாட் - தோழி : சிய்யான் சார்கிட்டதான் சொல்லணும்...

குளோஸ் ஷாட் - அண்ணன் எரிச்சலாகி தண்ணீர் பைப்பை கீழே வீசிவிட்டுச் செல்கிறார். தண்ணீர் முகத்தில் தெறிக்கிறது.

அண்ணன் : மூட் அவுட் பண்றதுக்குன்னே காலங்கார்த்தால வீடு தேடி வந்திருவாங்க போலருக்கு...

குளோஸ் ஷாட் - சிரித்தபடி அண்ணி வெளியே வருகிறாள். அபிதாவை வரவேற்கிறாள்.

வாங்கம்மா... வாங்க. உள்ளே வந்து உட்காருங்க.

மிட் ஷாட் - தன் அறையில் தலை வாரிக் கொண்டிருக்கிறான் சேது. அருகில் நண்பன் அமர்ந்திருக்கிறான். அங்கே அண்ணி வருகிறாள்.

அண்ணி : சிய்யான் சார்... உங்களைப் பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க. கொஞ்சம் கீழே வர்றீங்களா...?

சேது : போ.. வர்றேன்னு சொல்லு...

சேது அலட்சியமாக சொல்ல, அண்ணி போகிறாள்.

மிட் ஷாட் - சேதுவுக்காக காத்திருக்கும் அபிதாவிடம் சேதுவின் அண்ணன் குழந்தை கேட்கிறது

குழந்தை : நீங்க யாரு...

அபிதா : ம்...?

குழந்தை : நீங்க யாரு..? அய்யோ..! வில்லன் வர்றான்...

சேது வரும் சத்தம் கேட்டுக் குழந்தை ஓடுகிறது. சேது வருகிறான். அபிதாவும் தோழியும் எழுந்து நிற்கின்றனர்.

சேது : ஹாய்... சிட் சிட் சிட்டவுன்....

மூவரும் உட்காருகின்றனர்.

குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள்.

மிட் ஷாட் - சேது : அப்புறம்... என்ன சாப்பிடுறீங்க...? அண்ணி...

சேது அழைக்க அண்ணி வருகிறாள்.

தோழி : இல்ல ஒண்ணும் வேண்டாம்...

சேது : நோ... நோ... நோ... எங்க வீட்டுக்கு வந்தா ஏதாவது சாப்பிட்டுத்தான போகணும்...

அண்ணியிடம் திரும்பி

டூ காபி...  ஃபில்டர் காபி...

சொல்கிறான். அண்ணி உள்ளே போகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : ஒன்லி டூ யார்...

தோழி : ஒரு சின்ன கன்ஃபியூசன்...

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -

சேது : இந்த சிய்யானுக்கு அர்த்தம்தானே...? ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இன்னும் ஒரு டூ ஆர் த்ரீ டேஸ்லே தெரிஞ்சிடும்... வந்ததும் சொல்றேன்.

மிட் ஷாட் . அறைக்குள் உட்கார்ந்திருக்கும் சேதுவின் அண்ணன். அவர்களின் பேச்சைக் கவனிக்கிறார்.

குளோஸ் ஷாட் - தோழி : அதில்லே...

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -

சேது : பின்னே...?

குளோஸ் ஷாட் - தோழி : உங்களுக்கே தெரியும். நாளைக்கு செமஸ்டர் எக்ஸாம். இவ வீட்டிலே உட்கார்ந்து ஓன்னு அழுதுண்டு இருக்கா...

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -

சேது : ஏன் படிக்கலையா...?

குளோஸ் ஷாட் -

அபிதா : அச்சச்சோ....

பதறுகிறாள்.

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -

குளோஸ் ஷாட் -

சேது : அப்புறம்....?

தோழி : ஹால் டிக்கெட்டைத் தொலைச்சுட்டா. ஹெச்.ஓ.டி.எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லிட்டார்.

குளோஸ் ஷாட் - சேது : யாரு... யாரு...?

மிட் ஷாட் - சேதுவின் நண்பன் மாடியிலிருந்து இறங்கி வந்தபடி சொல்கிறான்.

நண்பன் : ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட்...

சேதுவின் அருகில் அமர்கிறான்.

குளோஸ் ஷாட் - தோழி.

மிட் ஷாட் - நண்பன் : ஹை...

அபிதாவின் தோழியை சேதுவின் நண்பன் ஜொள்ளுவிட வாயைப் பொத்திபடி சன்னமான குரலில் சொல்கிறான் சேது.

சேது : பெரிய புள்ள பூச்சியா இருக்கியேடா... இங்கேருந்து இடத்தைக் காலி பண்றியா...?

நண்பன் : தேங்க்யூ...

நண்பன் அங்கிருந்து கிளம்புகிறான்.

மிட் ஷாட் - அறைக்குள் உட்கார்ந்திருக்கும் சேதுவின் அண்ணன் அங்கே வரும் நண்பனிடம் அபிதாவைக் காட்டிக் கேட்கிறார்.

அண்ணன் : யார்டா அது...?

நண்பன் : கூடப் படிக்கிற புள்ளைங்க...

மிட் ஷாட் - அபிதாவுக்கும் தோழிக்கும் அண்ணி காபி கொடுத்துவிட்டுப் போகிறாள்.

சேது : சாப்பிடுங்க...

மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் மற்றும் நண்பன் இருக்கும் அறைக்கு வரும் அண்ணி அங்குள்ள ஃபோனை எடுத்துப் போகிறாள்.

அண்ணி : காபி நல்லா இருக்காமா...?

மிட் ஷாட் - சேது : ம்...

மிட் ஷாட் - அண்ணி : காபி! ஃபில்டர் காபி... நல்லா இருக்கான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா..?

மிட் ஷாட் -

சேது : ராங் நம்பர்...

என்று ஃபோனை வைக்கிறான் சேது.

மிட் ஷாட் - ஃபோனை வைத்துவிட்டு வரும் அண்ணி மற்றவர்களுடன் அமர்ந்து சேதுவை கவனிக்கிறாள்.

குளோஸ் ஷாட் - தோழி : அப்ப நாளைக்கு...

மிட் ஷாட் - அண்ணன், அண்ணி, நண்பன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்க...

சேதுவின் குரல் (Overlap) : நோ... நோ.. நோ பிராப்ளம். காலேஜ் இஸ் மை பாக்கெட்டுலே. இந்த லெக்சரர் புரொபசர் பிரின்சிபால் ஆல் ஆப் மை ஹேண்ட்...

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : யூ டோண்ட் வொர்ரி எனிதிங்... ஐ... ஹூ தட் ஹெச்.ஓ.டி? ஹூ தட் மேன் டிசைடு?

மிட் ஷாட் - அண்ணன், அண்ணி, நண்பன் ஆகியோர் சேது தப்புத் தப்பாக பேசுவதைக் கவனிக்கின்றனர்.

சேது குரல் (Overlap) : ஐயாம் த கிங் ஆஃப் காலேஜ்.

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : யூ ஸீ... ஐ டிசைடு.. அன்டர்ஸ்டாண்ட்...

குளோஸ் ஷாட் - தோழி.

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : டுமாரோ மார்னிங் டிஸ்கஷன்.. ஹெச்.. ஓ... டி பிராப்ளம் ஓவர். ஐ வில் டாக் எவ்ரிதிங்... ஓ.கே...

குளோஸ் ஷாட் - அபிதா நிமிர்ந்து பார்க்கிறாள்.

அபிதா : ம்...ம்...!

குளோஸ் ஷாட் - சேது

மிட் ஷாட் - அண்ணி : சும்மா சொல்லக் கூடாதுங்க. என்னமா இங்கிலீஷ் பேசுறான்... என்னங்க? (நண்பன் திரும்பி) இல்லையாடா...?

நண்பன் : ம்... ஆமா... ஆமா...

அண்ணியின் பாராட்டைக் கேட்டு எரிச்சலடைகிறார். அண்ணன், அவள் பேச்சை ஆமோதித்த நண்பனையும் திட்டுகிறார்.

அண்ணன் : டேய்... எந்திரிச்சுப் போடா...

நண்பன் : எஸ் யுவர் ஆனர்...!

நண்பன் எழுந்து போக, திட்டுகிறார் அண்ணன்.

அண்ணன் : அவன் பேசுறானாம்... இவ ரசிக்கிறாளாம்... மூஞ்சியும் மொகரைக் கட்டையும்...

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later