New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 17 - அதிகாலை - EXT./ அக்ரஹாரம்

குளோஸ் ஷாட் - அக்ரஹாரத் தெரு.

மிட் ஷாட் - பாட்டி, பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கின்றனர். அபிதாவின் அக்கா கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறாள். அப்போது ஒரு வயதான மாமி புலம்பியபடி வருகிறாள்.

மாமி : இந்த பாழாப் போன வாய்வு இடுப்புலே வந்து உட்கார்ந்துகொண்டு போவேனான்னு அழிச்சாட்டியம் பண்றது... அதுக்காக ஜலம் எடுக்காம இருக்க முடியறதோ...?

மிட் ஷாட் - அபிதாவின் அக்கா : ஏன் மாமி, நான் இறைச்சுத் தர மாட்டேனா...?

மாமி : நோக்கு ஏண்டியம்மா சிரமம்...?

அக்கா : பரவாயில்ல மாமி... இதெல்லாம் ஒரு உதவி...

குளோஸ் ஷாட் - இன்னொரு மாமி: இரு...இரு...இரு... நான் சொல்றேன்... மனுஷாளுக்கு மனுஷாள் ஒரு உதவி அதானே...?

மிட் ஷாட் - 'ம்' என்று தலையாட்டிய அபிதாவின் அக்கா தண்ணீர் இறைக்கிறாள்.

மாமி : இந்தக் காலத்துச் சிறுசுகளுக்கு பெரியவா சின்னவாங்குற மரியாதையே தெரியுறதில்லே... நீ தேவலாண்டியம்மா...

அக்கா : ஏன் மாமி... உங்க மூத்த பையன் எல்.ஐ.சியிலேதானே வேலை பார்க்கறா...

மாமி : ஆமா... ஆமா... ஆறு வருஷமாச்சு. சாதாரண ஏஜெண்டா ஜாயிண்ட் பண்ணினான். வருஷத்துக்கு ஒரு பிரமோஷன் ஏறி, இப்ப ஜோனல் ஆபீசரா இருக்கான்... பி.எஃப்., இந்தப் பிடித்தமெல்லாம் போக மாசம் செவன் தவுசன் சம்பளம் வாங்குறான்.

குளோஸ் ஷாட் - பெண்கள்.

குளோஸ் ஷாட் - அக்கா : அங்கே லோன் எல்லாம் தருவாளாமே...

குளோஸ் ஷாட் - மாமி : ம்... ஹவுசிங் லோன்...ஹாஸ்பிட்டல் லோன்... எஜூகேஷன் லோன்...ஏன் கல்யாணம் பண்றதுக்குப் பிரச்சனையில்ல... இப்ப அதுக்கெல்லாம் கூட லோன் தர்றாளாம்.

குளோஸ் ஷாட் - அக்கா : அப்ப கல்யாணத்துக்கப்புரம் ஏதாவது பிரச்சனை வந்தாக்கூட லோன் தருவாளா..?

குளோஸ் ஷாட் - மாமி : என்னடி சொல்றே...?

அக்கா : இல்ல, உங்க பையன்கிட்டே சொல்லி ஒரு நாற்பது ஆயிரம் லோன் வாங்கித் தர்றேளா..? கைமாத்தாத்தான் மாமி..

குளோஸ் ஷாட் - அக்கா: ...நேக்கு என் குழந்தை ஞாபகமா இருக்கு...

மிட் ஷாட் - மாமி : நன்னா கேட்டே போ... நேக்கு இடுப்பு வலி போய் நெஞ்சு வலியே வந்துடுச்சு..

அங்கிருக்கும் பெண்கள் சிரிக்கிறார்கள்.

ஒரு பெண் குரல் (Overlap) :நான் சொல்லல...

குளோஸ் ஷாட் - பெண்கள் கிண்டல் செய்வது கேட்டு அழுகிறாள் அக்கா.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later