New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 19 - INT./ கல்லூரி வளாகம்

மிட் ஷாட் - சேது நண்பர்களுடன் நூலகத்திற்குள் வருகிறான். அங்கு படித்துக் கொண்டிருப்பவர்களை அவர்கள் விரட்டுகின்றனர்.

சேது: ஏய்... ஓடு...போடா... பெரிய அறிஞர் அண்ணா...

ஒரு பெண் (ஆசிரியை) படித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணிடம்..

நண்பன்: புள்ள பெர்ற வயசுலே நீ எல்லாம் படிச்சு என்னப் பண்ணப்போறே...?

குளோஸ் ஷாட் - அபிதா அவர்களைப் பார்த்து மிரளுகிறாள்.

இன்னொரு நண்பன் குரல்(Overlap): ஏய்... பார்த்தா தெரியல்ல மேடம்..!

மிட் ஷாட் - நண்பன்: மேடம்...

ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது பாவனை செய்தபடி, 'போங்க' என்று விரட்டுகிறான்.

குளோஸ் ஷாட் - அபிதா கண்களில் மிரட்சி. பின்னணியில் மாணவிகள் மிரண்டு ஓடுகின்றனர். மிட் ஷாட் - அபிதாவின் தோழியும் வெளியே செல்கிறாள்.

நண்பன் : சிய்யான் பார்த்துப் பேசு... இது மத்த விஷயம் மாதிரி இல்லே... விஷ் யூ ஹேப்பி மேரேஜ் லைப்.

சேதுவின் நண்பன் அவனுக்கு அட்வைஸ் செய்து வாழ்த்திவிட்டுப் போக, இன்னொரு நண்பன் சேதுவின் கையில் முத்தமிட்டு விட்டுச் செல்கிறான்.

குளோஸ் ஷாட் : நூலகத்திற்குள் இருக்கும் அபிதா மிரண்டு பார்க்கிறாள். மிட் ஷாட் : அபிதாவை நோக்கி சேது வருகிறான். அவளும் அவனை நோக்கி வருகிறாள்.

குளோஸ் ஷாட் - அபிதா கண்களில் மிரட்சி. மிட் ஷாட் - சேது : அப்புறம்.... சாப்பிட்டாச்சா....?

குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று பயத்துடன் தலையாட்டுகிறாள்.

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : பசங்க முன்னாடியே சொன்னாங்க.... இந்த மாதிரி சிய்யான் உனக்கு அது... வந்திருக்குன்னு....

தயங்கித் தயங்கி பேசுகிறான் சேது.

குளோஸ் ஷாட் - அபிதா ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள்.

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -

சேது : நான் அப்ப நம்பலை... ஆனா இந்த ஒரு வாரமாவே ஒரு டைப்பாத்தான் இருக்கு....

குளோஸ் ஷாட் - அபிதா தலைகுனிகிறாள்.

குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் வெளியே நின்று சேது - அபிதாவை கவனிக்கின்றனர்.

சேது குரல் (Overlap) : இதை எப்படி உன்கிட்ட சொல்லி....

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா சேது : ...அப்படியே ஒரு சிந்தனை.... எங்க போறோம்... ஏன், எதுக்குப் போறோம்னு... தெரியாமே.... இது... இது ஒரு மாதிரி நெஞ்சைப் பிடிச்சுக் கசக்குற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் சுகமா நல்லாத்தான் இருக்கு....

உற்சாகமாய் பேசுகிறான் சேது.

குளோஸ் ஷாட் - அபிதா. குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா - சேது : அது... ஒண்ணும் பிரச்சினை இல்ல... என்ன, அதைக் கொஞ்சம் பேசி கரெக்ட் பண்ணிட்டா நிம்மதியா இருக்கும்.

குளோஸ் ஷாட் - அபிதா : என்ன சொல்றேள்... நேக்கு ஒண்ணும் புரியலையே...

குளோஸ் ஷாட் - சேது. குளோஸ் ஷாட் - அபிதா.

குளோஸ் ஷாட் - சேது : இப்பப் பாரு...

என்று தன் இரண்டு கையையும் தட்டி சத்தம் வர வைக்கிறான்.

குளோஸ் ஷாட் - அந்தச் சத்தம் கேட்டு மிரள்கிறாள் அபிதா.

குளோஸ் ஷாட் - சேது : சத்தம் வந்துச்சா...-?

குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று தலையாட்டுகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : எப்படி வந்துச்சு...-?

குளோஸ் ஷாட் - அபிதா : ம்...?

குளோஸ் ஷாட் - சேது : ரெண்டு கையும் சேர்ந்ததினாலே....

தன் கைகளைப் பற்றிக் காட்டுகிறான்.

குளோஸ் ஷாட் - அபிதா தலைகுனிகிறாள்.

குளோஸ் ஷாட் - வெளியே நிற்கும் நண்பர்கள்.

நண்பன் : தத்துவத்தப் புழியறாண்டா...

குளோஸ் ஷாட் - சேது : அது மாதிரி தானே இதுவும்.... அப்ப நாம என்ன பண்ணணும்...?

குளோஸ் ஷாட் - அபிதா முழிக்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : ஃபர்ஸ்ட் டிஸ்கஸ் பண்ணணும்.

குளோஸ் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது, அபிதா

சேது : என்னெல்லாமோ யோசிச்சு எல்லாமே மறந்து போச்சு. ஃபேன் ஓடியும் இவ்வளவு வேர்க்குதே...?

குளோஸ் ஷாட் - சேது : இதைப்பாரு... எல்லாத்தையும் நானே சொல்லணுமுன்னு எதிர்பார்க்கக்கூடாது.... எனக்கு மட்டும் கூச்சமா இருக்காதா...? அதனாலே நீயும் கொஞ்சம் எறங்கி வரணும்...

குளோஸ் ஷாட் - அபிதா : எங்கேயிருந்து எறங்கி வரணும்...?

அப்பாவியாக அபிதா கேட்க, சேது முகத்தில் டென்ஷன்

குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள்

நண்பன் : எனக்கு நம்பிக்கையில்ல...

இன்னொரு நண்பன் : வாய வைக்காதே அவனை அடிக்கிறான்.

குளோஸ் ஷாட் - சேது : கரெக்ட்... ஆம்பளைப் பையன்... எனக்கே இது சொல்லும் போது கை, கால் எல்லாம் உதறுகிறப்ப, உனக்குக் கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கும்....

மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது : பட்... வேறெ வழி இல்லையே... அதனாலே நீயும் கொஞ்சம் ஓப்பன் பண்ணு...

குளோஸ் ஷாட் - சேது சொன்னதைக் கேட்டு தப்பாகப் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த அபிதா பிறகு சமாதானமாகிறாள்.

மிட் ஷாட் - சேது : ஏய்...ஏய்...ஏய்...ச்சீ...ச்சீ...

குளோஸ் ஷாட் - சேது. குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : நான் சொல்றது புரியலையா....?

குளோஸ் ஷாட் - அபிதா : இது வரைக்கும் புரியலை...

குளோஸ் ஷாட் - சேது : சரி... முதல்லேருந்து சொல்றேன். கொஞ்சம் கவனமாக் கேட்டுக்க... என்ன?

குளோஸ் ஷாட் - அபிதா 'ம்' என்று தலையாட்டுகிறாள்.

குளோஸ் ஷாட் - அபிதாவைச் சுட்டிக்காட்டி சொல்கிறான்.

குளோஸ் ஷாட் - சேது : இப்ப என்னைப் பொறுத்தவரைக்கும் ஓ.கே.

குளோஸ் ஷாட் - அபிதாவுக்கு ஏதோ புரிந்தது போல் தலைகுனிகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : நான் ஓகேதான்... இருந்தாலும் நீ மறைக்கிறே.... ஓகே?

குளோஸ் ஷாட் - அபிதா : இதைப் பாருங்க....

அபிதா ஏதோ சொல்ல முயல...

குளோஸ் ஷாட் - ... அதை காதில் வாங்காமல் பேசுகிறான் சேது.

சேது : ஓகே...ஓகே...ஓகே... நான் ஆம்பள... பட்டுன்னு ஓக்கே சொல்லிட்டேன்... அதே மாதிரி நீயும் ஓ.கே. பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்...

குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் அதிர்ச்சி.

குளோஸ் ஷாட் - சேது : இருந்தாலும் ஓகே பண்றத்துக்கு இவ்வளவு டைம் எடுத்தா... நாம எப்படி ஓகே பண்ணி கரெக்ட் பண்றது...?

குளோஸ் ஷாட் - அபிதா சோகமாக தலை கவிழ்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : ஒருத்தருக்கு ஒருத்தர் ஓகேயானதுக்கு அப்புறம் அப்படியே ஓகே பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே...?

குளோஸ் ஷாட் - நண்பர்கள் : ஓகே...ஓகே....

குளோஸ் ஷாட் - அபிதா.

சேது குரல் (Overlap) : இதிலே மறைக்கிறதுக்கு என்ன இருக்கு...

குளோஸ் ஷாட் - சேது : யோசனை...! என்னடா நாம அய்யர் பொண்ணாச்சே... சரியா வருமா..?நம்ம வீட்டிலே ஒத்துக்குவாங்களா...? அதானே...?

குளோஸ் ஷாட் - அபிதாவுக்கு விஷயம் முழுமையாகப் புரிந்து அதிர்ச்சியடைகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்....

குளோஸ் ஷாட் - அபிதா அதிர்ந்துபோய் வாயைப் பொத்துகிறாள். கண்களில் கண்ணீர் திரண்டு வருகிறது.

குளோஸ் ஷாட் - சேது : எங்க வீட்டுல ஒரு பிரச்சினையுமில்ல... என்ன எங்க அண்ணன்தான் கடச்சல் பார்ட்டி... ஆனா ரெண்டு நாள் பட்டினி கெடந்தா ஒத்துப்பான்.

குளோஸ் ஷாட் - அபிதா அதிர்ச்சியில் கண்ணீர் வடிக்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : ஆமா, உன் வீட்டுல ஒரு ரெட்ட மண்டையன் இருக்கானே... உங்கப்பன்.. அவன் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டானே...?

குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் மேலும் அதிர்ச்சி.

குளோஸ் ஷாட் - சேது : அப்படின்னா சொல்லு... சேர்த்துவச்சு ஒரே அடி... ஹனிமூனெல்லாம் முடிஞ்சு பத்து நாள் கழிச்சுத்தான் எந்திரிப்பான்.

மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - சேது. அபிதாவிடம் பேசுகிறான்.

குளோஸ் ஷாட் - அபிதா கண்களில் மிரட்சி.

மிட் ஷாட் - அபிதாவிடம் பேசுகிறான்.

குளோஸ் ஷாட் - அபிதா. மிட் ஷாட் - சேது. அபிதாவிடம் விளக்கிக் கொண்டிருக்கிறான். வசனங்கள் இல்லாமல் பின்னணியில் இசை மட்டும் சத்தமாக ஒலிக்கிறது.

குளோஸ் ஷாட் - சேது : என்ன... சரிதானே-

குளோஸ் ஷாட் - அபிதா சரேலென நிமிர்கிறாள்.

சேது : ஓகே?

குளோஸ் ஷாட் - குழப்பத்தில் இருக்கும் அபிதா 'ஓகே' என்பதுபோல் தலையாட்டுகிறாள். குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் முகத்தில் வெற்றிப் பெருமிதம். மிட் ஷாட் - அபிதாவைப் பார்த்தபடிப் போகிறான் சேது.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later