New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 25 - பகல் - INT./ கல்லூரி இரசாயனக் கூடம்

மிட் ஷாட் - அபிதாவும் தோழியும் சோதனை செய்து கொண்டிருக்கின்றனர்.

தோழி : நேத்து என்னடி ஆச்சு...?

அபிதா : ஆசிட் பாட்டில்ல லேபிளை மாத்தி ஒட்டிட்டான்.

தோழி : அப்புறம்...

அபிதா : அப்புறமென்ன...? அது தெரியாமே சொல்யூசனை மிக்ஸ் பண்ணிட்டேன். அவ்வளவுதான். பொங்கிடுத்து. சித்த இரு, வர்றேன்.

என்ற அபிதா கையில் பாட்டிலுடன் வருகிறாள். எதிரில் வரும் சேதுவைப் பார்த்ததும் நிற்கிறாள்.

குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் கலக்கம்.

குளோஸ் ஷாட் - சேது பாக்கெட்டிலிருந்து கொலுசை எடுத்து அபிதாவிடம் நீட்டுகிறான்.

சேது : இந்தா வச்சுக்கோ...

குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் அச்சம்.

குளோஸ் ஷாட் - சேது : முன்னாலேயே வாங்கிட்டேன்... அன்னைக்கு அந்த பயபுள்ளையைப் பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு. அவனை அன்னைக்கே வெளுத்து அனுப்பியிருப்பேன். இப்ப அவன் நம்ம சொந்தக்காரனா ஆகிப்போயிட்டான்...

மிட் ஷாட் - சேது : ... அதனலே தப்பிச்சுட்டான். இந்தா, அளவு சரியா இருக்கான்னு பாரு...

கொலுசை அவளிடம் நீட்டுகிறான் சேது.

அபிதா : நேக்கு இதெல்லாம் வேணாம்...

அபிதா : நீங்க நினைக்கிற மாதிரி என் மனசுலே அப்படி எதுவுமில்ல....

குளோஸ் ஷாட் - சேது : ஏன்....?

அதிர்ச்சியுடன் கேட்கிறான் சேது.

குளோஸ் ஷாட் - அபிதா : அய்யோ....! நெஜமாவே நான் உங்களை அப்படி நெனைக்கல்லே....

குளோஸ் ஷாட் - சேது : அப்புறம் ஏன் அன்னைக்கு மண்டையை மண்டையை ஆட்டுனே?

குளோஸ் ஷாட் - அபிதா மிரட்சியாக அவளைப் பார்க்கிறான்.

குளோஸ் ஷாட் - சேது : இந்தப் பார்... முன்னாடியே நான் சொல்லிட்டேன்... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ பயப்படாதே!

அபிதா : அய்யோ! எல்லாரும் பாக்குறாங்க.... நேக்கு ரொம்ப அசிங்கமா இருக்கே...

சேது : அசிங்கமா இருக்கா....? எனக்கும்தான் அசிங்கமா இருக்கு... உன் பின்னாடி லோ லோன்னு அலையுறதைப் பார்த்து காலேஜே சிரிக்குது...

அதெல்லாம் நான் பார்த்தா அப்புறம் உன் வாழ்க்கை எப்படி நல்லபடியா அமையுறது...? சரி, சரி வச்சுக்க.... எதுவா இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம்.

மறுபடியும் கொலுசை அவளிடம் நீட்டுகிறான் சேது.

குளோஸ் ஷாட் - அபிதா : ஈஸ்வரா!

காதைப் பொத்திக் கொள்கிறாள் அபிதா.

மிட் ஷாட் - மேஜையிலிருந்து புத்தகத்தை எடுத்து அதன் மீது அபிதா சத்தியம் செய்கிறாள்.

அபிதா : என் படிப்பு மேல சத்தியம். என் மனசுலே அப்படி எதுவுமில்ல.

குளோஸ் ஷாட் - சேது முகத்தில் கடும் அதிர்ச்சி.

மிட் ஷாட் - சேது : ஏன்...? எனக்கு என்ன குறை? அப்படி ஏதாவது இருந்தாச் சொல்லு... நான் மாத்திக்கிறேன்... ஆனா முடியாதுன்னு மட்டும் சொல்லாதே...

மிட் ஷாட் டாப் ஆங்கிள் - சேது : அது ரொம்பக் கஷ்டம் சொல்லிட்டேன்.

அபிதா : கடவுளே...

அபிதா நோட் புக்கை வைத்துவிட்டு பாட்டிலுடன் செல்ல முற்படுகிறாள்.

சேது : ஏய்... கேட்கிறேன்... முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டுப் போ... என்ன நினைச்சுக்கிட்ருக்கே...? என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா...? சொல்லு... சொல்லு... சொல்லுடி....

சேது அவளின் கையைப் பிடித்து இழுக்கிறான். அபிதா திமிறுகிறாள். அந்தக் திமிறலில் அவள் கையிலிருந்த...

குளோஸ் ஷாட் - ....பாட்டில் கீழே விழுந்து உடைகிறது.

குளோஸ் ஷாட் - சேது பாட்டிலைப் பார்க்கிறான். அபிதாவையும் பார்க்கிறான்.

குளோஸ் ஷாட் - அபிதா : காட்டுமிராண்டி....

சொல்லிட்டு அழுகிறாள்.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later