New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 27 - பகல் - INT. / கல்லூரி

மிட் ஷாட் - கல்லூரி உள்ளே நடைபாதையில் எதிரணி ஆட்கள் உட்கார்ந்திருக்கின்றனர். பாட்டுப் பாடியபடி சேதுவின் நண்பன் வருகிறான். வரும்போது ஒரு பெண்ணை பயமுறுத்தியபடி வருகிறான்.

நண்பன் : நான் செத்துப் பொழைச்சவண்டா... அந்த எமனைப் பார்த்துச் சிரிச்சவன்டா... ஹஹ்ஹா....

எதிரணி ஆளின் காலை தெரியாமல் மிதித்து விடுகிறான். எதிரணி ஆள் அவனை சட்டையைப் பிடிக்கிறான்.

நண்பன் : ஸாரி....

குளோஸ் ஷாட் - எதிரணி ஆள் : ஸாரி சொன்னா சரியாப் போச்சா....?

எதிரணி ஆள் சேதுவின் நண்பனை அடிக்கிறான்.

நண்பன் : ஏய், என்னடா.... என்ன..?

சேதுவின் நண்பனை எதிரணி ஆள் அடித்து, கீழே தள்ளி உதைக்கிறான். அவன் அலறுகிறான். அதை ஊமைப் பெண் பார்க்கிறாள். சேதுவிடம் ஓடுகிறாள். குளோஸ் ஷாட் - சேதுவிடம் ஊமைப்பெண் சைகையால் சொல்கிறாள். மிட் ஷாட் - சேது எதிரணி ஆளை அடிக்கிறான். சிலர் தப்பி ஓடுகிறார்கள். மிட் ஷாட் - அப்போது அபிதா அங்கு வர அவளைப் பார்த்ததும் அடிப்பதை நிறுத்துகிறான் சேது. குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - அடிப்பதை நிறுத்திய சேது அபிதாவைப் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் அவனைப் பார்க்கின்றனர். மிட் ஷாட் - அந்த இடத்தைவிட்டு சேது போகிறான். குளோஸ் ஷாட் - அபிதாவும் போகிறாள்.

காட்சி 27 A - பகல் - EXT . / கல்லூரி வெளிப்புறம்

டைட் குளோஸ் ஷாட் - சேது இறுக்கமா இருக்கிறான். மிட் ஷாட் - மாடிப் படியில் சேது உட்கார்ந்திருக்க அங்கே நண்பர்கள் வருகின்றனர்.

நண்பன் : ஏய், உங்களுக்கு சூடு, சொறனை, எதுவும் கிடையாதா? இன்னும் ஏண்டா எங் பின்னாடி வர்றீங்க? போடா.... போங்கடா....அடி வாங்கிட்டு வந் நிக்கிறாங்க.... பாருங்க... வெட்கம் கெட்டப் பசங்க....

குளோஸ் ஷாட் - சேது

மிட் ஷாட் - நண்பன் : உங்களை அடிச்சா நாங்க வருவோமுன்னு நினைச்சியா...

குளோஸ் ஷாட் - சேது.

நண்பன் குரல் (Overlap) : எங்களுக்கு வேற வேலை இல்லை...?

மிட் ஷாட் - நண்பன் : ஏய், உன்னையும்தான் ஏதாவது பொண்ணுக்குப் பின்னாடி சுத்துறதா இருந்தா முன் கூட்டியே சொல்லிடு... நான் கழண்டுக்கிறேன்.

மிட் ஷாட் - நண்பன் : போக மாட்டீங்ளா... போடா... போய் பாவாடை, தாவணி ஏதாவது இருந்தா கட்டிட்டு வாங்க... அப்ப சப்போர்ட் பண்றோம்.

மற்ற நண்பர்களை விரட்டுவது போல் சேதுவை கேலி பேசுகிறான். குளோஸ் ஷாட் - ஊமை வேடிக்கை பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - நண்பனை சேது முறைக்கிறான்.

சேது : ஏய்...?

மிட் ஷாட் - நண்பன் : நான் உன்னைச் சொல்லலை.... இங்கே பேசுறேன்...

என்றவன் சேது அருகில் செல்கிறான்.

நண்பா : காசு கொடுத்தா நூறு பேரு வருவாளுங்கடா... இன்னைக்கு உன்னக் கிறங்க அடிச்சிட்டு நாளைக்கு வேற எவனையாவது கட்டிட்டுப் போகப்போறா... அப்ப போய் அவகிட்டே... போ...

குளோஸ் ஷாட் - சேது முகத்தில் கோபம். மிட் ஷாட் - சேது, நண்பனை அடிக்கிறான். நண்பன் திருப்பி சேதுவை அடிக்கிறான். குளோஸ் ஷாட் - ஊமை பதறுகிறாள். மிட் ஷாட் - மற்ற நண்பர்கள் தடுத்தும் மீண்டும் மீண்டும் நண்பனை சேது உதைக்கிறான்.

மிட் ஷாட் - நண்பன் : சிய்யான் வேண்டாம்டா சிய்யான்...

சேது : என்னடா சிய்யான்?

நண்பன் அலறுவதைப் பொருட்படுத்தாமல் சேது அடிகிறான். மாடிப் படியில் அவனை உருட்டிவிட்டு தரதரவென இழுத்து வருகிறான்.

குளோஸ் ஷாட் - சேதுவின் மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

சேது : கையா நீட்டுறே...

மிட் ஷாட் - சேது நண்பனை அடித்து உதைத்தபடி இரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறான். இரயில் கடந்து போகிறது. ஊமை நண்பனைக் காப்பாற்ற முயற்சிக்க 'போடி' என்று அவளையும் உதைக்கிறான் சேது.

சேது : பார்க்காதடா...

மறுபடியும் நண்பனை அடிக்கிறான்.

மிட் ஷாட் - நண்பன் : அடிடா... அடிடா அது ஒண்ணுதான் பாக்கி... அதையும் செஞ்சுட்ட... போதுமடா சாமி....

அழுதுகொண்டே கும்பிடு போட்டுவிட்டுச் செல்கிறான். அவன் பின்னால் அழுதபடி ஊமையும் செல்ல சேது மட்டும் நிற்கிறான். நண்பனை நினைத்து வருந்துவது போல் தலையில் அடித்துக் கொள்கிறான் சேது.

- - - - - - இடைவேளை - - - - - -

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later