திரைக்கதை - சேது
காட்சி 28 - பகல் - INT. /கல்லூரி
மிட் ஷாட் - சேதுவின் நண்பர்களும், ஊமையும் உட்கார்ந்திருக்க சேது அங்கே வருகிறான். நண்பர்களைப் பார்த்ததும் தயக்கத்துடன் நெருங்குகிறான்.
சேது : டேய்... வா போய் தண்ணி அடிப்போம்.
நண்பர்களை அழைக்கிறான்.
நண்பன் : போடா...
அடி வாங்கிய நண்பன் மறுக்கிறான்.
சேது : சரிடா... வா...
நண்பன் : விடுறா...
சேது : தாஸ்...
நண்பன் : என்னை அடிச்சது கூட முக்கியமில்லே... நம்மளை விட்டா அவனுங்களுக்கு வேறே யாருடா இருக்காங்க? நேத்து வந்தவ ரொம்ப முக்கியமாகிட்டா... டேய், ஏழெட்டு வருஷமா நம்ம பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கானுங்க... அவனை அடிவாங்க விட்டு வேடிக்கை பார்த்துட்டேயில்லே...?
நண்பன் சொன்னதும் சேது வருத்தப்படுகிறான்.
சேது : நீதானேடா சொன்னே.. சொஞ்சம்அடக்கி வாசின்னு...
நண்பன் : சொன்னேன்... அதுக்காக...?
சேது : சரி விடு... அவனுக்கு இருக்கு ஒரு நாளைக்கு... மன்னிச்சிடுடா...
நண்பன் : பரவாயில்ல.. வேண்டாம் சிய்யான் நம்ம எப்பவும் போலவே இருப்போம்.... இந்த லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்.
சேது : முடியலேடா.. உள்ளேயிருந்து உயிரை வாங்குறா...
வேதனையுடன் தன் நெஞ்சில் குத்திக் கொள்கிறான் சேது.
காட்சி 29 - பகல் \ இரவு - EXT . / பல இடங்கள்
மாலை என் வேதனை கூட்டுதடி....
காதல் தன் வேலையைக் காட்டுதடி....
எனை வாட்டும் வேலை ஏனடி...?
நீ சொல்வாய் கண்மணி...
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே...
வேகுதே என் மனம் மோகத்திலே...
மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள்
ஏண்டா அம்பி...?
காதலும் பொய்யுமில்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ்
என்னா அம்பி
காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம்...
கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கை வரும் நாள் வருமா...?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையைக் காட்டுதடி
காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி...
மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ...?
கடலாடும் அலைகூட பதில்தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து
பதை பதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல்
திருமணம்...
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
எனை வாட்டும் வேலை ஏனடி...
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ...
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
மாலை தன் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையைக் காட்டுதடி...
சேதுவின் மன வேதனையை வெளிப்படுத்தும் பாடல் காட்சி
|