New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 3 - காலை - INT./ சேது வீடு.

குளோஸ் ஷாட் - ஒரு வீட்டின் வெளிப்புறம். 'எம்.கே.பி. வாசுதேவன், எம்.ஏ.,பி.எல்., மாஜிஸ்ட்ரேட்' என்ற போர்டு மாட்டப்பட்டுள்ளது. பேனிங் டு - வீட்டின் வெளிப்புறத் தோற்றம். குளோஸ் ஷாட் - சமையல் கட்டில் சேதுவின் அண்ணி வேலை செய்து கொண்டிருக்கிறாள். குளோஸ் ஷாட் - டைனிங் டேபிளில் குழந்தை (சேதுவின் அண்ணன் மகள்) அமர்ந்திருக்கிறது. குளோஸ் ஷாட் - குழந்தையின் எதிரில் சேதுவின் அண்ணன் (வாசுதேவன்) அமர்ந்திருக்கிறார்.

அண்ணன்: ஏய் எவ்வளவு நேரம்டி... ?

சமையல்கட்டை நோக்கி குரல் கொடுஇக்கிறார். மிட் ஷாட் - அண்ணன், குழந்தை.

அண்ணி குரல் (Overlap): வர்றேன்... வர்றேன்...

குழந்தை: அப்பா... அப்பா... சித்தப்பா இன்னும் தூங்குறான்

அண்ணன்: அவன் கிடக்குறான் சோம்பேறி. நீ சமத்துக்குட்டி.

சமையல் கட்டிலிருந்து டிபன் கொண்டு வருகிறாள் அண்ணி.

அண்ணி: விடிஞ்சதிலேர்ந்து மணிக்கணக்கா பேப்பரும் கையுமா உட்கார்ந்துக்கிட்டு ஒன்பது மணி ஆனவுடனே ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சிருங்க. நான் கிடந்து ஆலாப் பறக்க வேண்டியிருக்கு... டிபனைப் பறிமாறுகிறாள்.

அண்ணன்: துரை... இன்னும் எந்திரிக்கலையோ... ?

குளோஸ் ஷாட் - சேது மாடியிலிருந்து இறங்கி வருகிறான். மிட் ஷாட் - அண்ணன், அண்ணி

அண்ணி : வர்றான்... வர்றான்... ஏதாவது கேக்கணுணமன்னா அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறமாக் கேளுங்க. அண்ணி உள்ளே போகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது வருகிறான். டைனிங் டேபிளில் உட்காருகிறான். குழந்தையை அடிப்பது போல் பாவனை செய்கிறான். குழந்தை பழிப்புக் காட்டுகிறது. அண்ணன் அவனை முறைக்கிறார்.

குளோஸ் ஷாட் - சேது டேபிளில் தாளம் போட, அவனை எரிச்சலாகப் பார்க்கிறார் அண்ணன். குளோஸ் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடுகிறான்.

சேது : ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி...

குளோஸ் ஷாட் - குழந்தை பேனிங் டு அண்ணன் சேதுவை முறைக்கிறார். குளோஸ் ஷாட் - சேது பாடுகிறான்.

என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...

மிட் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருக்க அண்ணி டிபனுடன் வருகிறாள். குழந்தை சிரிக்க முயல, கண்களால் அதட்டுகிறாள். அண்ணன் முறைக்கிறார்.

சேது : இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி... என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...

குளோஸ் ஷாட் - முறைப்புடன் அண்ணன். குளோஸ் ஷாட் - அண்ணி அவரைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - அண்ணணின் முறைப்பு. மிட் ஷாட் - அண்ணி பறிமாற, அண்ணன் சாப்பிட முயல, மறுபடி சத்தமாகப் பாடுகிறான் சேது. அண்ணன் பயந்து சாப்பாட்டை நழுவ விடுகிறார். மனைவியை முறைக்கிறார்.

சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து... ஏய்... சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து...

குளோஸ் ஷாட் - குழந்தை மிட் ஷாட் - சேது பாடியபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான்.

குழந்தை : ச்சீ... போ... ரெளடி...

அண்ணி : ஏய்... என்ன பேச்சு இது?

எவன்டி இதெல்லாம் உனக்கு சொல்லித் தர்றது? அண்ணி குழந்தையை அதட்டுகிறாள். அண்ணன் குறுக்கிட்டு...

அண்ணன் : குழந்தையை எதுக்கு அதட்டுறே? அவ என்ன தப்பா சொல்லிட்டா... அவன் ரெளடி இல்லையா?

மிட் ஷாட் - சேது : இப்ப என்ன ரெளடித்தனம் பண்ணிட்டோம்?

மிட் ஷாட் - அண்ணன் : ஏய், எகிர்ர வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே, அவகிட்ட வச்சுக்க. என்ற அண்ணன், மனைவியிடம்

நேத்து இவ்வளவு நடந்திருக்கே, கொஞ்சமாவது கவலை இருக்காடி இவனுக்கு... ?

குளோஸ் ஷாட் - சேது : அவன் என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?

மிட் ஷாட் - அண்ணன் : டேய், தோத்தவன் அப்படித்தாண்டா பண்ணுவான். நீ தான் பொறுமையாப் போகணும்.

குளோஸ் ஷாட் - சேது : அப்படியெல்லாம் உன்னை மாதிரி இருக்க என்னால முடியாது.

மிட் ஷாட் - அண்ணன் : பார்த்தியாடி...?

சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றும் முயற்சியாக டிபனைப் பரிமாறுகிறாள் அண்ணி சேதுவின் தட்டிலும் இட்லியை வைக்கிறாள்.

அண்ணி : சரி, சரி முதல்லே சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம், அவரு சொல்றதும் சரிதாண்டா... நமக்கு என் இந்த வம்பெல்லாம்? தவறி கண்ணுல கிண்ணுலே பட்டிருந்தா என்ன ஆகிறது?

குளோஸ் ஷாட் - சேது : ஏய், நீயும் அவரோட சேர்ந்துகிட்டு... எலெக்ஷன்னா அப்படித்தான் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு ஒதுங்கிப் போனா, காலேஜ்ல என் கெளரவம் என்னாகிறது?

மிட் ஷாட் - அண்ணன் : ஓ... கெளரவம்! அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே? அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...

குளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...

மிட் ஷாட் - அண்ணன் : ஆ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்? அவன் தாடியும் டிரெஸ்சும்...

மிட் ஷாட் - அண்ணி : அப்பப்பா... கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? முதல்ல அவன் சாப்பிட்டு முடிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.

அண்ணி சேதுவின் அருகில் போகிறாள். இட்லியை அவன் தட்டில் வைக்கிறாள்.

அண்ணன் : இவன் கெட்டதும் இல்லாம இன்னும் மூணு பேர சேர்த்து கெடுத்துக்கிட்டு இருக்கான்.

குளோஸ் ஷாட் - சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது நிமிர்ந்து அண்ணியை முறைக்கிறான்.

மிட் ஷாட் - அண்ணன் : வை வை. நல்லாத் தின்னுட்டு இன்னும் நாலு பேரை அடிக்கட்டும். கழுதைப்புலி மாதிரி வளர்ந்திருக்கான்...

அண்ணி சட்னியை ஊற்ற, அண்ணன் சொல் பொறுக்காமல் சாப்பாட்டுத் தட்டை விசிறி அடித்துவிட்டு எழுந்து போகிறான் சேது.

அண்ணி : டேய்... டேய்... நில்லுடா... அவனைத் துரத்திக்கொண்டு போகிறாள் அண்ணி. குளோஸ் ஷாட் - அண்ணன்

சேதுவின் குரல்(Overlap) : போ போ... நீயும் உன் புருஷனும் எல்லாத்¨யும் கொட்டிக்கங்க...

குளோஸ் ஷாட் - குழந்தை மிரட்சியுடன் பார்க்கிறது.

மிட் ஷாட் - அண்ணி திரும்பி வந்து வாசுதேவன் அருகில் அமர்கிறாள்.


 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later