New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 30 - பகல் - EXT . / அக்ரஹாரம்

மிட் ஷாட் - அக்ரஹாரத்திலிருக்கும் பலான வீட்டிலிருந்து குடி போதையிலிருக்கும் ஒருவனை வெளியே தள்ளுகிறார்கள் சிலர்.

ஒருவன் : போடா நாய்... மப்புல வந்தா பெரிய மைனருன்னு நினைப்பு...

குடிகாரன் : நான் என்ன கொங்காப் பயலா?

ஒருவன் : ஒழுங்கா ஊர் போய்ச் சேருடா... டேய்...

குடிகாரன் : காஞ்சி போன கிஸ்மிஸ் பழம் மாதிரி இருக்கா. தண்ணியப் போட்டா கண்ணு தெரியாதா...? ஸ்டடியா... இதப் பாரு... இருந்தா இவ மாதிரி இருக்கனுமுடா...

தெருவில் நடந்து வரும் ஒரு சிறுமியைப் பிடித்து பலாத்காரம் செய்கிறான். குளோஸ் ஷாட் - திண்ணையில் சேதுவின் நண்பன் அதைப் பார்க்கிறான். 'டேய் விடுறா' என்று கத்திபடி எழுகிறான். மிட் ஷாட் - ஓடிவரும் சேதுவின் நண்பனை அடித்துக் கீழே தள்ளி, தானும் விழுகிறான் குடிகாரன்.

குடிகாரன் : எவன்டா தள்ளினது...?

காட்சி 31 - மாலை - EXT . / ஆற்றங்கரை ஓரம்

மிட் ஷாட் - சேது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, இரண்டு நண்பர்கள் மூச்சிறைக்க ஓடி வருகிறார்கள். அவனிடம் ஏதோ சொல்கிறார்கள்.

காட்சி 32 - இரவு ? INT. / EXT . / அக்ரஹாரம்

மிட் ஷாட் - நண்பர்களுடன் பைக்கில் வந்து இறங்குகிறான் சேது. மிட் ஷாட் - பலான வீட்டுக்குள் வரும் சேதுவும் அவன் நண்பர்களும் கண்ணில் படும் ஆட்களையெல்லாம் அடிக்கின்றனர். மிட் ஷாட் - சேது ஆட்களை அடிக்கிறான்.

மிட் ஷாட் - ஒருவன் : டேய் யாருடா நீங்க? கேட்கிறேன் இல்லே...

சேது : இவனா...?

நண்பன் : இல்லை.

கேள்வி கேட்ட ஆளையும் அடிக்கிறான் சேது.

மிட் ஷாட் - சேது : உள்ள போய் பாரு.

நண்பன் யாரையோ தேடி உள்ளே போகிறான். சேது ஒரு அறைக்குள் நுழைய அங்கே அபிதாவின் அக்கா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள்.

குளோஸ் ஷாட் - ஜூம் - அபிதா அக்கா.

குளோஸ் ஷாட் - சேது அவனை வெறுப்பாக பார்க்கிறான்.

குளோஸ் ஷாட் - அக்கா : என்னடா அம்பி, பணம் கொடுத்து அனுப்பிச்சாளா?

சேது : பணமா...?

குளோஸ் ஷாட் - அக்கா : ம்... நாப்பதினாயிரம் தர்றேன்னாளே...?

குளோஸ் ஷாட் - சேது : உன் மொகறைக்கே அவ்வளவு வேணுமா...? அது... என்கூட வா.. உன் மாமன் வீட்டிலே தருவாங்க.. வந்து வாங்கிக்க...

குளோஸ் ஷாட் - அக்கா : அய்யோ, அவாளுக்குக் கொடுக்கத்தாண்டா கேட்டிருந்தேன்.

குளோஸ் ஷாட் - சேது

குளோஸ் ஷாட் - அக்கா : போ... போய் வாங்கிண்டு வா... போ... போடா.

குளோஸ் ஷாட் - சேது : அடி... வாடா போடான்னா ஓங்கிக் குறுக்க சேர்த்து ஒரு மிதி. இடுப்பு எலும்பு எல்லாம் உடைஞ்சிடும்.

சேதுவின் மிரட்டலில் ஒரு கணம் மிரள்கிறாள் அபிதாவின் அக்கா.

குளோஸ் ஷாட் - ஜன்னல் வழியே பார்க்கிறான் சேதுவின் நண்பன்.

சேது : பார்த்தா மாமி மாதிரி தெரியுது. இப்படி படுத்து சம்பாதிக்க வந்துட்டியே... நாயே உனக்கு எல்லாம் வெட்கமா இல்லே...

குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா ஆவேசமாக எழுந்து வந்து சேதுவின் கன்னத்தில் அறைகிறாள். குளோஸ் ஷாட் - சேது அதிர்ச்சியாகி அவளைப் பார்க்கிறான்.

குளோஸ் ஷாட் - அக்கா : என்னடா விட்டா நாக்கு ரொம்பத்தான் நீள்றது... கை நீட்டி பணம் வாங்க வந்துட்டா அவ்வளவு இளக்காரமாப் போச்சா...?சும்மா ஒண்ணுமில்லே... அஞ்சுவட்டி தர்றேன்னு சொல்லியிருக்கேன். ஞாபகத்துல வச்சுண்டு பேசு.

குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பன் ஜன்னல் வழியே பார்க்கிறான். குளோஸ் ஷாட் - சேது அதிர்ச்சியுடன் அபிதாவின் அக்காவைப் பார்க்கிறான். மிட் ஷாட் - போலீஸ் விரட்ட சிலர் பயந்து ஓடுகிறார்கள்.

குளோஸ் ஷாட் - அக்கா : படுத்துச் சம்பாதிக்க வந்திருக்கேனாம்... யார்கிட்டே என்ன பேசிண்டு இருக்கே... நாக்கை ஒட்ட அறுத்துருவேன் ஜாக்கிரதை. என் தலையெழுத்து, என்னடா வம்பா கூப்புட்டு உபகாரம் பண்றாளேன்னு பார்த்தேன். இப்போ இல்லே புரியறது.. நேக்கு பணமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்... நான் ஆத்துக்குப் போறேன்...

அழுதபடி வெளியே செல்ல முயன்றவளை பாய்ந்து தடுக்கிறான் சேது குளோஸ் ஷாட் - சேது தடுக்கிறான். குளோஸ் ஷாட் - அக்கா புரியாமல் அவனைப் பார்க்கிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : இப்டிப் போனா ஆத்துக்கோ குளத்துக்கோ போக முடியாது... போலீஸ் ஸ்டேஷன்தான் போகணும்...

குளோஸ் ஷாட் - அக்கா : ஏன்? எதுக்கு?

குளோஸ் ஷாட் - அக்காவை சைகையால் அழைத்து வெளியே நடப்பதைக் காட்டுகிறான் சேது. மிட் ஷாட் - விபச்சாரம் செய்தவர்ளை போலீஸ் பிடித்துச் செல்கிறது.

குளோஸ் ஷாட் - சேது : இதுகளோட சேர்த்து அக்ரஹாரத்துல ஊர்வலமா கூட்டிட்டுப் போவாங்க...

குளோஸ் ஷாட் - அக்கா அழுகிறாள்.

குளோஸ் ஷாட் - சேது : பரவாயில்லையா...?

குளோஸ் ஷாட் - அக்கா : போயிடுத்து... நாசமாப் போயிடுத்து...

மிட் ஷாட் - அக்கா : ...ஏற்கனவே என்னைக் கிறுக்குச்சின்னு மட்டும்தான் சொல்லிண்டிருந்தா... இப்போ வேசிங்கிற பட்டத்தையும் கட்டப் போறாளே... அப்புறம் ஆயுசு முழுக்க என் பிள்ளையைப் பார்க்காமே என் பிராணனை விட வேண்டியதுதான்.

லாங் ஷாட் - விபச்சாரப் பெண்களைப் போலீஸ் ஏற்றுகிறார்கள். குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி அதைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - விபசாரிகள் போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறார்கள். குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி பார்க்கிறாள். மிட் ஷாட் - போலீஸ் வேன் கிளம்புகிறது. குளோஸ் ஷாட் - அபிதாவின் தோழி பார்க்கிறாள். மிட் ஷாட் - வீட்டிலிருந்து சேதுவின் நண்பர்கள் வருகின்றனர். குளோஸ் ஷாட் - தோழிக்குப் பின்னால் அபிதா நிற்பது தெரிகிறது. மிட் ஷாட் - சேது வெளியே வந்து பைக்கில் உட்காருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள். சேதுவும் அவளைப் பார்க்கிறான். ஒரு பெண் (அபிதாவின் அக்கா) முக்காடு போட்டபடி சேதுவின் பைக்கில் உட்கார பைக் கிளம்புகிறது.

குளோஸ் ஷாட் - நண்பன் : ஜெகஜ்ஜால கில்லாடிடா அவன். நமக்கு தோணாமப் போச்சே...

மற்றொரு நண்பன் : நான் வேணுன்னா உட்காரட்டுமா...?

பெண்ணின் பாவனையில் நண்பன் கேட்கிறான். பைக்கில் உட்காருகிறான். பைக் கிளம்புகிறது.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later