திரைக்கதை - சேது
காட்சி 33 - இரவு - EXT . / ஒதுக்குப்புறமான ஓர் இடம்
லாங் ஷாட் - அபிதாவின் அக்காவுடன் பைக்கில் வரும் சேது. ஆளரவமற்ற இடத்தில் பைக்கை நிறுத்துகிறான். போர்த்திக் கொண்டிருந்த சேதுவின் சட்டையை அவனிடம் கொடுத்த அபிதாவின் அக்கா அழுதபடி கைகூப்பி வணங்குகிறாள்.
சேது : சரி...!
அபி அக்கா : அடி பலமா பட்டுடுத்தா...?
சேதுவுன் கன்னத்தைத் தொட்டுக் கேட்கிறாள்.
சேது : உங்க புருஷன் எங்கே வேலை பார்க்கிறாரு..?
அப் அக்கா : சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்...
சேது : பார்த்துப் போங்க.
சேது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான். அபிதாவின் அக்கா அழுதபடி அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
குளோஸ் ஷாட் - அக்கா. குளோஸ் ஷாட் - டூ வீலரில் வரும் அம்பி அவளைப் பார்த்து அதிர்கிறான். குளோஸ் ஷாட் - அம்பியைப் பார்த்த அக்கா முகத்தில் அதிர்ச்சி. குளோஸ் ஷாட் - அம்பி முகத்திலும் அதிர்ச்சி.
காட்சி 34 - பகல் - EXT . / INT . / ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்
குளோஸ் ஷாட் - 'சார்பதிவாளர் அலுவலகம்' என்ற போர்டு
மிட் ஷாட் - நண்பனுடன் பைக்கில் வருகிறான் சேது. மிட் ஷாட் - ஆவேசமாக ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ் உள்ளே செல்கிறான். குளோஸ் ஷாட் - சேது நண்பர்ளுடன் ஆபீசுக்குள் வருகிறான். மிட் ஷாட் - நண்பன் அபிதாவின் அக்கா கணவரை அடையாளம் காட்ட, சேது அவனை சரமாரியாக அடிகிறான். அவன் அலறுகிறான்.
குளோஸ் ஷாட் - சேது : நாளைக்கு வந்து உன் பொண்டாட்டியை நீ வீட்டுக்குக் கூட்டிட்டு போகலே... போறே...
மிட் ஷாட் - சொல்லிவிட்டு ஆபீஸை விட்டு வெளியேறுகிறான் சேது.
காட்சி 35 - பகல் - INT. / அபிதா வீடு
குளோஸ் ஷாட் - குருக்கள் மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறார். குளோஸ் ஷாட் - முகத்தில் பிளாஸ்திரியுடன் அபிதாவின் அக்கா கணவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறான். குளோஸ் ஷாட் - அரிசி புடைத்தபடி வாசலுக்கு வரும் அபிதா அத்திரம் பேரைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - கொல்லைப் புறத்தில் சோகமாக நிற்கும் அக்காவிடம் வந்து சொல்கிறாள் அபிதா.
அபிதா : அக்கா... அத்திம்பேர்...!
குளோஸ் ஷாட் - அக்கா நம்பமுடியாமல் பார்க்கிறாள். மிட் ஷாட் - அத்திம்பேர் குழந்தையுடன் மனைவியை பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அக்கா: எப்படி இது..?
காயத்தைக் காட்டி கேட்கிறாள்.
பையன் : அம்மா...
மிட் ஷாட் - அத்திம்பேர் : சரி கிளம்பு...
குளோஸ் ஷாட் - அக்கா : பணம்...
அத்திம்பேர் : அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ புறப்படு...
அபிதா அக்கா புறப்படத் தயாராக ஜூம் ஃபார்வர்டு அபிதாவும் குருக்களும் அன்னாந்து கடவுளை சேவிக்கின்றனர்.
|