திரைக்கதை - சேது
காட்சி 39 - பகல் EXT . / பங்களாவுக்கு வெளியே
மிட் ஷாட் - வெளியே வந்து ஆனந்தக் கூத்தாடுகிறான் சேது.
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
... பாடல் காட்சி தொடர்கிறது.
மிட் ஷாட், குளோஸ் ஷாட், மிட் ஷாட் \ டாப் ஆங்கிள் - பின்னணியில் பாடல் ஒலிக்க, பைக்கில் கால் நீட்டிப் படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவை ஒருவன் அடிக்கிறான். எட்டு பேர் சேதுவை மாற்றி மாற்றி அடிக்க
ஆண் குரல் (Overlap) : பெரிய ஹீரோவாடா நீ... ஏதோ எங்க வயித்துக்கு பொம்பளைங்களை கூட்டிவிட்டு பொழப்பு நடத்துறோம். இதுல உனக்கு என்னடா?
லாங் ஷாட் - சேதுவை பலமாக அடித்து அவனை மலையடிவாரத்தில் உருட்டி விடுகின்றனர். லாங் ஷாட் - சேது அவர்களைத் திருப்பித் தாக்குகிறான். லாங் ஷாட் \ டாப் ஆங்கிள், மிட் ஷாட் - சுற்றி நின்று சேதுவை சரமாரியாக அடிக்கின்றனர். குளோஸ் ஷாட் - சேது மயக்கமாகிறான். மிட் ஷாட் - மயங்கிய சேதுவை ஒருவன் அடித்து கீழே தள்ளுகிறான். குளோஸ் ஷாட் - மயக்கமாகிக் கிடக்கும் சேதுவை ஒருவனின் கால் புரட்டிப் போடுகிறது. மிட் ஷாட் - ஒருவன் பார்கிறான். மிட் ஷாட் - பாறை. மிட் ஷாட் - மயங்கிக் கிடக்கும் சேதுவைத் தூக்கிச் சென்று பாறையில் மோதுகிறார்கள். பாறையில் சேதுவின் தலை மோதி ரத்தம் தெறிக்கிறது. மிட் ஷாட் - மீண்டும் மோதுகிறார்கள்.
குளோஸ் ஷாட் - சேதுவைத் தூக்கி வீசுகிறார்கள். மிட் ஷாட் - சேது பெரும் குரலில் அலறுகிறான்.
லாங் ஷாட் - சுயநினைவற்ற நிலையில் ஒரு பாறையில் தொங்குகிறான் சேது.
காட்சி 40 - பகல் - INT. / மருத்துவமனை
குளோஸ் ஷாட் - இருண்ட திரையின் இடப்பக்கம் கம்ப்யூட்டர் மானிட்டரில் மங்கலான எழுத்துக்கள் தெரிய, வலப்பக்கம் ஸ்கேன் மெஷினில் தலையில் கட்டுடன் சேது படுக்க வைக்கப்பட்டிருக்கறான்.
குளோஸ் ஷாட் - அண்ணி. அண்ணன், அழுதபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
மிட் ஷாட் - ஸ்கேன் மெஷினில் சேது சோதிக்கப்படுகிறான்.
குளோஸ் ஷாட் - அண்ணி வாய்ப்பொத்தி அழுகிறாள். குளோஸ் ஷாட் - ஸ்கேன் செய்யப்படும் சேது. குளோஸ் ஷாட் - அண்ணி அழுகிறாள். அண்ணன் கண்ணீருடன் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் சோகமாக அமர்ந்திருக்கின்றனர். மிட் ஷாட் - ஸ்கேனிங் ரூமிலிருந்து வரும் டாக்டர் கம்ப்யூட்டர் இயக்குகிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணி, அண்ணன் கண்ணீருடன் டாக்டரைப் பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - டாக்டர். குளோஸ் ஷாட் - கம்ப்யூட்டரில் சேதுவின் ஸ்கேனிங் படம்.
குளோஸ் ஷாட் - 'ப்ச்' என்று வருத்தப்படுகிறார் டாக்டர். மிட் ஷாட் - கம்ப்யூட்டரை பார்த்தபடி உட்காருகிறார் டாக்டர். பிறகு ஃபைலைப் பிரித்து எழுதுகிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணன் அண்ணி அவரைப் பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - சேதுவின் ரிப்போர்ட் ஃபைலில் ADMITTED என்று சீல் வைக்கிறார் டாக்டர். குளோஸ் ஷாட்/லோ ஆங்கிள் - மனநல மருத்துவ மையம் ராமநாதபுரம் என்ற நுழைவாயில்.
குளோஸ் ஷாட் - அண்ணி வாயைப் பொத்தி அழ, அண்ணனும் அழுதபடி பார்க்கிறார்.
|