திரைக்கதை - சேது
காட்சி 41 - பகல் - INT. / மனநல மருத்துவ மையம்
லாங் ஷாட் - நோயாளி உடையில் இருக்கும் சேதுவை பணியாளர் அழைத்து வர, அண்ணன், அண்ணி நண்பர்கள் உடன் வருகிறனர்.
குளோஸ் ஷாட் - தலை தொங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் நடந்து வருகிறான் சேது. மிட் ஷாட் - மற்றவர்களைத் தடுத்துவிட்டு சேதுவை ஜெயில் போன்ற அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர் ஊழியர்கள்.
மிட் ஷாட் - சேதுவை அறையில் விட்டு அறையைப் பூட்டுகின்றனர். சுவரில் சாய்ந்து தலை தொங்கியபடி நிற்கிறான் சேது.
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன், அண்ணி, நண்பர்கள் அழுதபடி திரும்பிச் செல்கின்றனர்.
காட்சி 42 - பகல் - EXT./ கல்லூரி வளாகம்
குளோஸ் ஷாட் - முகவாயை வைத்தபடி சோகமாக உட்கார்ந்திருக்கிறாள் அபிதா. அருகில் அவளது தோழி.
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா.
தோழி: ஏய்... இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கப் போறே...?
குளோஸ் ஷாட் - அபிதா: பார்க்கணும் போல இருக்கு...
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா.
தோழி: இங்கே பாரு... தேவை இல்லாமே உன் மனசைப் போட்டுக் குழப்பிக்காதே...
குளோஸ் ஷாட் - அபிதா: ஏன் புரிஞ்சுக்கமாட்டேன்கிற...?
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா.
தோழி: தெரியும்... இது எதுவுமே சரிப்பட்டு வராது... நீ உன் மனச மாத்திக்கறதுதான் நல்லதுன்னு தோணுது.
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாகிறாள்.
காட்சி 43 - பகல்/இரவு - INT./மனநல மருத்துவமனை
லாங் ஷாட் - மன நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
குளோஸ் ஷாட் - சேதுவை டாக்டர் தொட, சூன்யமாகப் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - சேது கத்துகிறான். குளோஸ் ஷாட் - அவனுக்கு ஊசி போடுகின்றனர். குளோஸ் ஷாட் - சேது மயங்குகிறான். மிட் ஷாட் - சேதுவுக்கு அண்ணி உணவு ஊட்டுகிறாள். குளோஸ் ஷாட் - மனநலமருத்துவமனை தனிமை அறையில் சுயநினைவில்லாமல் சேது உட்கார்ந்திருக்கிறான். மிட் ஷாட் - மருத்துவமனை வாசலில் நிற்கும் ஊமை நுழைவாயிலைப் பார்க்கிறாள்.
மிட் ஷாட் - தனியாக உட்கார்ந்திருக்கும் சேதுவை ஊழியர் அடிக்க, சேது குழந்தை போல் பயந்து ஓடுகிறான்.
|