திரைக்கதை - சேது
காட்சி 46 - இரவு - INT./EXT./சேது வீடு
குளோஸ் ஷாட் - அண்ணி சேதுவுக்கு சாதம் தயார் செய்கிறாள். மிட் ஷாட்/டாப் ஆங்கிள் - சோபாவில் சுய நினைவில்லாமல் சாய்ந்திருக்கிறான் சேது. அருகில் சோகமாக அண்ணன் உட்கார்ந்திருக்கிறார். குளோஸ் ஷாட் - /லோ ஆங்கிள் - சேது வீட்டு வாசல் கேட்டில் தலை சாய்த்தபடி கவலையுடன் ஊமைப் பெண் நிற்கிறாள்.
குளோஸ் ஷாட் - அழுதபடி அண்ணி சேதுவுக்கு சாதம் ஊட்டுகிறாள். லோ ஆங்கிள் மிட் ஷாட் - ஊமை கவலையுடன் நிற்கிறாள். குளோஸ் ஷாட் - மயங்கிக் கிடக்கும் சேதுவின் வாயில் சாதம் இருப்பதை அழுதுகொண்டே துடைக்கிறாள் அண்ணி.
மிட் ஷாட் - ஊமை சோகமாக நிற்க அவளுக்குப் பின்னால் ஒரு வேன் வருகிறது.
மிட் ஷாட் - நண்பன்: அண்ணே... வண்டி வந்திருச்சி...
சேதுவின் நண்பன் அண்ணனிடம் சொல்ல, அண்ணி கதறி அழுகிறாள்.
லோ ஆங்கிள் / குளோஸ் ஷாட் - வாசலில் நிற்கும் ஊமைப் பெண்ணைக் கடந்து வேன் உள்ளே வருகிறது. மிட் ஷாட் - அண்ணி கதறி அழ, ஸ்ட்ரெச்சரில் வைத்து சேதுவைத் தூக்கிச் செல்கின்றனர். மிட் ஷாட் - சேதுவை வேனில் ஏற்றுகின்றனர். குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் குழந்தை அழுகிறது. குளோஸ் ஷாட் - அண்ணி அழுகிறாள். குளோஸ் ஷாட் - வேனுக்குள் சேதுவை ஏற்றி கதவை மூடுகின்றனர். குளோஸ் ஷாட் - அண்ணன் அழுகிறார். குளோஸ் ஷாட் - நண்பன் அழுகிறான். குளோஸ் ஷாட் - வேன் போகிறது. மிட் ஷாட் - ஊமை, வேனை துரத்திக் கொண்டு ஓடுகிறாள். குளோஸ் ஷாட் - வேன் போகிறது. ஊமை ஓடுகிறாள். குளோஸ் ஷாட் - ஊமை அழுகிறாள். மிட் ஷாட் - ஊமை சத்தம் வராமல் கதறி அழுகிறாள். குளோஸ் ஷாட் - ஊமை அழுகிறாள்.
காட்சி 47 - இரவு - INT./ பாண்டி மடம்.
லாங் ஷாட் - பாண்டிமடத்தில் இருக்கும் மன நோயாளிகளின் சத்தம். 'பாண்டி மடம், இராமநாதபுரம் ஜில்லா' என்ற டைட்டில் கார்டு. ஸ்டடி கேம் (காமிராவில் படம் பிடிக்கப்பட்ட) ஷாட் - பாண்டி மடத்தில் இருக்கும் பல்வேறு மனநோயாளிகளையும், பாண்டிமடத்தின் சூழ்நிலையையும் காட்டுகிறது.
'எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார்...'
.....பாடல் காட்சி.
மிட் ஷாட் - அடையாளம் தெரியாத அளவுக்கு மொட்டை அடிக்கப்பட்டு, கிழிந்த இடுப்புத் துணியுடன், வெற்றுடம்பில் சங்கிலி பிணைக்கப்பட்டு, பரிதாபமான தோற்றத்துடன் தரையில் படுத்துக் கிடக்கிறான் சேது.
பின்னணியில் ஒலிக்கும் பாடல் தொடர,
பாண்டிமடத்தின் முழுமையான பின்னணியும், அங்கே தரப்படும் சிகிச்சை முறைகளும், காட்சிகள் மூலம் விளக்கப்படுகினறன. மனநோயாளியாக இருக்கும் சேதுவுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அவனது அண்ணன், அண்ணி மற்றும் நண்பர்கள் ஊமைப் பெண் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சேதுவைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
காட்சி 48 - பகல் - EXT./ அபிதா வீடு
மிட் ஷாட் - வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருக்கிறாள் அபிதா. சாலையில் சேதுவின் நண்பன் ஸ்ரீராம் வருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவனை அழைக்கிறாள்.
ஸ்ரீராம், அவர் எங்கே இருக்கார்னு யாருமே சொல்ல மாட்டேங்கறா... நீயாவது சொல்லு...
குளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: இல்லே... பொம்மனாட்டி யாரும் அங்கே போப்படாது...அதான்...
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.
குளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: பயப்படும்படி எதுவுமில்லை. சரியாகிவிடும். நான் வர்றேன்.
மிட் ஷாட் - ஸ்ரீராம் செல்ல, அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.
|