New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 49 - பகல் - INT./ பாண்டி மடம்

மிட் ஷாட் - கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் சேது நினைவற்றுக் கிடக்கிறான். அவன் உடல் முழுக்க பச்சிலை தடவப்பட்டிருக்கிறது. வாழை இலையால் அவன் உடல் மூடப்பட்டிருக்கிறது. குளோஸ் ஷாட் - சேது முகத்துக்கு நேராக ஒரு மண் பானையைக் காட்டுகின்றனர். குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்திலும் பச்சிலை தடவப்படுகிறது. குளோஸ் ஷாட் - சேது குப்புறப் படுக்கவைக்கப்பட்டிருக்கிறான். அவன் முதுகிலும் பச்சிலை தடவுகிறார் சாமியார். குளோஸ் ஷாட் - சேது கண்மூடிப் படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவை குளிப்பாட்டுகிறார்கள். குளோஸ் ஷாட் - அவன் முகத்தில் தெளிவு தெரிகிறது. குளோஸ் ஷாட் - சேது குணமாகி வருவதை உணர்த்தும் கிராஃபிக்ஸ் ஷாட்.

காட்சி 50 - காலை - INT. /அபிதா வீடு

குளோஸ் ஷாட் - அபிதா சுலோகம் சொல்கிறாள்.

அங்கார கமலி புத்ரா

பகவன் பக்த வச்சலா

மிட் ஷாட் - குருக்கள் வருவதை கவனிக்காமல் கண் மூடி சுலோகம் சொல்கிறாள்.

மமா சேஸ ரோகம் ஆசு வினா சயா

அங்கார கமலி புத்ரா

பகவன் பக்த வச்சலா

குருக்கள்: யாருக்கு குணமாகனுன்னு இந்த தோத்ரம் சொல்லிண்டு இருக்கா?

அம்பி வர, அவனிடம் கேட்கிறார் குருக்கள்.

குளோஸ் ஷாட் - அபிதா குரல் (Overlap) : அங்கார கமலி புத்ரா

குருக்கள் : சாப்பிட்டாளோ என்ன...?

அம்பி: இல்லே, கார்த்தாலே உட்கார்ந்தவதான்.

குருக்கள்: அம்பி, நோக்கு உடம்புக்கு ஒண்ணுல்லையே...

அம்பியின் உடம்பைத் தொட்டுக் கேட்கிறார் குருக்கள்.

அம்பி: நேக்கு ஒண்ணுமில்லே. கூட படிக்கிறவாளுக்கு சித்த சுவாதீனம் இல்லேன்னுட்டு...

குளோஸ் ஷாட் - அபிதா: பகவன் பக்தவச்சலா

குளோஸ் ஷாட் - குருக்கள்: பார்த்தியோன்னா அப்படியே அவ அம்மா மனசு. வேத்து மனுஷானுகூட பார்க்காம வேண்டிண்டு இருக்கா பாரு...

பெருமிதமாக சொல்கிறார் குருக்கள்.

அம்பி: அவன் ஒண்ணும் வேத்து மனுஷா இல்லே...

குருக்கள்: பின்னே? கேக்குறேனோன்னோ

அம்பி: காலேஜ்லே கூட படிக்கிறவன். நம்ம அபித்தும் அவனை...

குருக்கள் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறது.

குருக்கள்: அவனை...?

குளோஸ் ஷாட் - அபி சுலோகம் சொல்கிறாள்.

அங்கார கமலி புத்ரா...

பகவன் பக்தவச்சலா

குளோஸ் ஷாட் - குருக்கள். சஜஷன் அம்பி.

குளோஸ் ஷாட் - அம்பி. சஜஷன் குருக்கள்.

குளோஸ் ஷாட் - அம்பி. சஜஷன் குருக்கள்.

குளோஸ் ஷாட் - அபிதா பாடுகிறாள்.

குளோஸ் ஷாட் - அம்பி குருக்களிடம் சொல்கிறான். குருக்கள் அழுகிறார். வசனங்கள் இல்லாத ஷாட்ஸ்.

மிட் ஷாட் - பாடிக் கொண்டிருக்கும் அபிதாவின் அருகில் செல்கிறார் குருக்கள்.

குளோஸ் ஷாட் - அபிதாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்புகிறார்.

குளோஸ் ஷாட் - குருக்கள்: அபித்து... அம்பி சொல்றதெல்லாம் உண்மைதானாம்மா...

குளோஸ் ஷாட் - அபிதா அம்பியைப் பார்க்கிறாள். பிறகு 'ஆமாம்' என்பதுபோல் அழுகையுடன் தலையாட்டுகிறாள். குளோஸ் ஷாட் - குருக்கள் அழுகிறார். குளோஸ் ஷாட் - அபிதாவும் அழுகிறாள்.

குளோஸ் ஷாட் - குருக்கள்: உங்க அக்கா பண்ணின காரியத்துக்கு நான் பிராணனே விட்டிருக்கணும். இன்னும் இந்த உடம்புல உசிர் ஒட்டிண்டு இருக்குன்னா அதுக்கு நீதான் காரணம். நீயுமா இப்படி...

குளோஸ் ஷாட் - அபிதா: தப்புன்னு சொல்றேளா...

குளோஸ் ஷாட் - குருக்கள்: அபித்து...

குளோஸ் ஷாட் - அபிதா: நேக்கு இதுதான் சரின்னு தோண்றதுப்பா...

குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா

குருக்கள்: அபித்து அந்த பையனுக்கு ரொம்பப் பெரிய மனசு, இல்லேங்கலே. அவன் நமக்கு பெரிய உதவி பண்ணியிருக்கான். நாம நன்றி செலுத்தி ஆகணும். அத விட்டுட்டு உன்னையே கொடுக்கணுமுன்னு முடிவே பண்ணிடுறதா? தப்பும்மா...

குளோஸ் ஷாட் - அபிதா: கொடுக்கணுமுன்னு முடிவு பண்ணிட்டப்புறம் இதுல மனசென்ன, உடம்பென்ன? ரெண்டும் ஒண்ணுதானேப்பா...

குளோஸ் ஷாட் - அபிதா சொன்னதைக் கேட்டு அதிர்கிறார் குருக்கள்.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later