New Register   -  Login     
Tamil Mozhi - Cinema
 - தமிழ்மொழி முகப்பு » சினிமா »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
சேது
முழு திரைக்கதை மற்றும் வசனம்
   
காட்சிகள்
   
திரைக்கதை - சேது
காட்சி 5 - பகல் - INT. / அபிதா வீடு.

மிட் ஷாட் - அபிதா, குருக்கள், அம்பி ஆகியோர் இருக்கின்றனர். குளோஸ்

ஷாட் - அபிதா அப்பாவைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - குருக்கள் சாமி கும்பிடுகிறார்.

குளோஸ் ஷாட் - அபிதா : ஏம்ப்பா... நேக்கு இந்த பேர் வச்சேள்...?

குளோஸ் ஷாட் - குருக்கள் : அபித்துன்னா...

குளோஸ் ஷாட் - அபிதா : அபித குஜலாம்பாள்னு...

குளோஸ் ஷாட் - குருக்கள் : அது உன் பெரிய பாட்டியோட பேர்

இல்லையோ...?

குளோஸ் ஷாட் - அபிதா : சரி வச்சேளோ இல்லையோ... அதுக்கு என்ன அர்த்தமுன்னு இப்போ சொல்லுங்கோ.

குளோஸ் ஷாட் - குருக்கள் : அதுக்கு இப்போ என்ன அவசரம்...?

குளோஸ் ஷாட் - அபிதா : காலேஜ்ல எல்லாரும் கிண்டல்

பண்றாப்பா...என்னன்னு சொல்லுங்கோ...

காட்சி 6 - பகல் - EXT. / கல்லூரிக்குச் செல்லும் பாதை.

மிட் ஷாட் - இரயில்வே ஸ்டேஷன் அருகில் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறான் சேது. அங்கே வரும் ஊமைப் பெண் சைகையால் காசு கேட்கிறாள். சேதுவின் நண்பன் அவளுக்குக் காசு கொடுக்க, அதைக் கீழே வீசுகிறாள். சேதுவிடம் வந்து அவனை உலுக்கிக் காசு கேட்கிறாள்.

சேது : ஏய்... ஏய்... தொடாதே... (டீக்கடையை நோக்கி) மாஸ்டர் ஒரு டீ... போ...

ஊமைப் பெண்ணுக்காக டீ ஆர்டர் செய்கிறான். மிட் ஷாட் - டீக்கடையை நோக்கி ஊமை போகிறாள். குளோஸ் ஷாட் - ஊமைக்கு கடைக்காரன் டீ கொடுக்கிறான். கடையின் ஓரமாக நின்று ஊமை டீ குடிக்கிறாள். குளோஸ் ஷாட் - சேதுவின் எதிரணி ஆள் ஊமையை முறைத்துப் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - அவனை கவனிக்காமல் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி டீ குடிக்கிறாள் ஊமை. குளோஸ் ஷாட் - ஊமையின் பாவாடையை உருவுகிறான் எதிரணி ஆள். ஊமை அலறுகிறாள். குளோஸ் ஷாட் - சற்று தூரத்தில் அமர்ந்திருக்கும் சேது ஊமையின் அலறல் கேட்டு ஓடுகிறான். குளோஸ் ஷாட் - எதிரில் வரும் அபிதா சல்யூட் அடிக்கிறாள். அவளை கவனிக்காமல் ஓடுகிறான் சேது. மிட் ஷாட் - ஓடி வரும் சேது ஊமையின் பாவாடையை கட்டி விடுகிறான். குளோஸ் ஷாட் - சேது, எதிரணி ஆளை முறைக்கிறான். மிட் ஷாட் - எதிரணி ஆளை உதைக்கும் சேது ஊமையைத் தூக்குகிறான். குளோஸ் ஷாட் - அபிதா பார்க்கிறாள். மிட் ஷாட் - சேது ஊமைக்குப் பாவாடை கட்டி விடுகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். குளோஸ் ஷாட் - தோழியுடன் அபிதா போகிறாள். குளோஸ் ஷாட் - ஊமை அழுகிறாள். அவளை சேது பரிவுடன் அணைத்தபடி பாவாடையைக் கட்டி விடுகிறான்.

காட்சி 7 - காலை - INT. / சேது வீடு.

மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணி காபி கொண்டு வருகிறாள்.

அண்ணன் : அந்த மூதேவியை எழுப்பி விடு...

அண்ணி : ஏன்? தூங்கட்டும். இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தானே...?

சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்.

குளோஸ் ஷாட்-அண்ணன் : ஏய்... இன்னிக்கி அவன் பெறந்த நாள். போய் எழுப்பி விடு.

உள்ளே சென்ற அண்ணி திரும்பி வந்து சொல்கிறாள்.

குளோஸ் ஷாட் - அண்ணி : அப்பா! ஜட்ஜ்! அத சிரிச்சிக்கிட்டுத்தான் சொன்னா என்னவாம்...?

திரும்பவும் உள்ளே செல்கிறாள் அண்ணி.

குளோஸ் ஷாட் - அண்ணன்.

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later