திரைக்கதை - சேது
காட்சி 51 - இரவு - INT. / பாண்டிமடம்
மிட் ஷாட் - மன நோயாளிகள் கூட்டத்தில் ஒருவனாக சேது படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்தில் தெளிவு தெரிகிறது. குளோஸ் ஷாட் - மூளை குணமானதைக் குறிக்கும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஷாட். குளோஸ் ஷாட் - சேது முகத்தில் மாற்றம் தெரிகிறது. குளோஸ் ஷாட் - மூளை குணமானதைக் குறிக்கும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஷாட்.
குளோஸ் ஷாட் - சேது கண் விழிக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவுக்கு புத்தி சரியானது தெரிகிறது. மிட் ஷாட் - எழுந்து உட்காருகிறான். சுற்றிலும் பார்க்கிறான். மனநோயாளிகள் மத்தியில் இருப்பதை உணருகிறான். குளோஸ் ஷாட் - தலையைத் தடவிய சேது மொட்டை அடிக்கப்பட்டிருப்பது தெரிந்து அழுகிறான். மிட் ஷாட் - எழுந்து சங்கிலியை அறுக்க முயற்சி செய்கிறான் சேது. பக்கத்தில் நிற்கும் ஒரு மனநோயாளி சிரிக்க அவனை ஓங்கி உதைக்கிறான். குளோஸ் ஷாட் - கத்தியபடி சங்கிலியை அறுக்கிறான் சேது. மிட் ஷாட் - ஊழியர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களை அடிக்கிறான் சேது. மிட் ஷாட் - சேதுவை ஆட்கள் பிடிக்கிறார்கள்.
சேது: விடுங்கடா...
மிட் ஷாட் - சேதுவைப் பிடிக்கிறார்கள்.
குளோஸ் ஷாட் - ஒரு மன நோயாளி சிரிக்கிறான். மிட் ஷாட் - சேதுவை ஊழியர்கள் பிடிக்கிறார்கள். மிட் ஷாட் - சேதுவை சங்கிலியால் கட்டிவிட்டுப் போகிறார்கள். குளோஸ் ஷாட் - ஒரு மன நோயாளி சிரிக்கிறான். மிட் ஷாட் - சேது கத்துகிறான். குளோஸ் ஷாட் - ஒரு மனநோயாளி சிரிக்கிறான்.
காட்சி 52 - இரவு - INT/ அபிதா வீடு
மிட் ஷாட் - வீட்டில் அபிதா சோகமாக உட்கார்ந்திருக்கிறாள்.
காட்சி 53 - இரவு - INT. / சேது வீடு.
குளோஸ் ஷாட் - சோகமாக உட்கார்ந்திருக்கிறான் சேதுவின் அண்ணன். அருகில் அண்ணியும் உட்கார்ந்திருக்கிறாள்.
அண்ணி: ஏங்க, இப்படியே இருந்தா எப்படி? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஏதாவது பேசுங்களேன்.
அண்ணன்: என்ன இருக்கு...? அவன் நல்லா இருந்தப்போ ஒரு நாள் ஒரு பொழுது கூட நான் சிரிச்சுப் பேசலை. அந்த விதத்திலே நீ ரொம்பக் கொடுத்து வச்சவ...
அண்ணி: இப்ப மட்டும் என்ன குறைஞ்சு போச்சு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நாள்தானே...
|