திரைக்கதை - சேது
காட்சி 54 - பகல் - INT./ பாண்டி மடம்
லாங் ஷாட் - பாண்டி மட சாமியார் மனநோயாளிகளைப் பார்வையிட்டபடி வருகிறார். சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும் சேது அவரை எதிர்நோக்கி நிற்கிறான். மிட் ஷாட் - சேது மடத்தில் நிற்கிறான். தூரத்தில் சாமியார் வருகிறார். குளோஸ் ஷாட் - சேது சாமியாரைப் பார்க்கிறான். மிட் ஷாட் - சாமியார் வருகிறார். குளோஸ் ஷாட் - சேது பார்க்கிறான். மிட் ஷாட் - சேது அருகில் சாமியார் வருகிறார். அவரை வணங்குகிறான் சேது. குளோஸ் ஷாட் - சேது சாமியாரைப் பார்த்து ஏதோ சொல்ல வருகிறான். குளோஸ் ஷாட் - சாமியார் அவனைப் பார்க்கிறார். குளோஸ் ஷாட் - சேது நல்லா இருக்கேன் என்று சொல்ல வர, இரைச்சலில் அவன் குரல் எடுபடவில்லை. சத்தமாக சொல்ல முயலுகிறான். குளோஸ் ஷாட் - சேது சாமியாரிடம் பேச முயலுகிறான்.
குளோஸ் ஷாட் - சாமியார் மயில் இறகினால் அவன் முகத்தைத் தடவுகிறார்.
சாமியார்: நல்லாசி...
குளோஸ் ஷாட் - சேது அபிதா ஞாபகத்தில் கண் மூடுகிறான். ஃப்ளாஷ் கட் - குளோஸ் ஷாட் - அபிதா. குளோஸ் ஷாட் - சேது மயங்குகிறான். குளோஸ் ஷாட் - சேது கண் திறக்க சாமியார் போகிறார். மிட் ஷாட் - சாமியார் போய்விட்டது தெரிந்து கத்துகிறான். மிட் ஷாட் - சேது அழுதபடி சரிந்து உட்காருகிறான்.
மிட் ஷாட் - சேது: சாமி... சாமி...
அழுகிறான்.
காட்சி 55 - இரவு - INT. / அபிதா வீடு
மிட் ஷாட் - அபிதா தூங்காமல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அம்பி: அபித்து... தூங்கலையா?
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாகப் பார்க்கிறாள். 'ப்ச்' என்று சொல்லி 'இல்லை' என்பது போல் தலையாட்டுகிறாள்.
குளோஸ் ஷாட் - அம்பி: ஏன்...?
குளோஸ் ஷாட் - அபிதா: நேக்கு அவரைப் பார்க்கணும் போல இருக்கு...
குளோஸ் ஷாட் - அம்பியின் முகம் மாறுகிறது.
குளோஸ் ஷாட் - அபிதா. குளோஸ் ஷாட் - அம்பி யோசிக்கிறான்.
அம்பி: சரி... கார்த்தாலே போகலாம்.
குளோஸ் ஷாட் - அபிதா: எப்படி...?
காட்சி 56 - இரவு - INT./ பாண்டிமடம்
லாங் ஷாட் - பாண்டி மடம்.
குளோஸ் ஷாட் - சேது தப்பிக்கும் முயற்சியாக தன்னை பிணைத்திருக்கும் சங்கிலியைக் கல்லால் அடிக்கிறான்.
வாழ்க்கை எனும் ஓடம்...
வழங்குகின்ற பாடம்...
மிட் ஷாட் - பாடிக் கொண்டிருக்கும் மனநோயாளியைக் கடந்து செல்கிறான் சேது.
வாழ்க்கை எனும் ஓடம்...
வழங்குகின்ற பாடம்...
மிட் ஷாட் - உறங்கிக் கொண்டிருக்கும் மனநோயாளிகளைத் தாண்டி ஓடுகிறான் சேது.
மானிடரின் மனதினிலே...
மறக்க ஒண்ணா வேதம்
மிட் ஷாட் - மதில் சுவரில் எறுகிறான். சேது சற்று தூரம் ஓடுகிறான். மிட் ஷாட் - கேட் அருகே வரும் சேது கேட்டில் ஏறுகிறான். குளோஸ் ஷாட் - பாண்டி மட ஆட்கள் அவனைத் துரத்திக் கொண்டு ஒடி வருகின்றனர். குளோஸ் ஷாட் - கேட்டில் உள்ள கூரான கம்பி சேதுவைக் குத்துகிறது. குளோஸ் ஷாட் - சேது கத்துகிறான். குளோஸ் ஷாட் - மரம். சேதுவின் அலறல் சத்தம் (Overlap)
|