New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
குழந்தைக் கவிஞர் அழ ள்ளியப்பா 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கென பாடல்கள் பாடியுள்ளார். எனவே இவர் குழந்தை கவிஞர் என அழைக்கப்படுகிறார். குழந்தைப் பாடல்களை பாடுவது மிகவும் எளிதானது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் பெரியவர்களைப் பற்றி பாடிவிடலாம் ஆனால் சிறுவர்களுக்கான பாடல் புனைவது கடினம். சொல்லில் மென்மை இனிமையான வார்த்தைகளைக் கொண்டு நிறைந்த கருத்துக்கள் அமைந்தனவாக இருக்க வேண்டும் அவ்வாறு புனைவது என்பது மிகவும் கடினம். இப்பாடல்களுக்கு சந்தம் (ரிதிம்) மிக மிக அவசியம், குழந்தைகளின் வயதிற்கும் மன வளர்ச்சிக்கு ஏற்பவும் பாடல் அமைய வேண்டும் ஆனால், இதனை மிகவும் இனிமையாக ஏற்று பல குழந்தை பாடல்களை வள்ளியப்பா பாடியுள்ளார்.

குழந்தைப் பாடல்கள் 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் எழுதினார்கள். அவை ஆரம்ப வகுப்பு பாடத்திற்கென்றே எழுதப்பட்டது. திருமணம் செல்வகேசவராயர், தணிகை உலகநாதன் போன்றோர் எழுதினார்கள், பின்னர் குழந்தைபாடல் தொகுதி சிலரால் வெளியிடப்பட்டன.

பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன் போன்றோர் குழந்தைகளுக்கு என பாடல் இயற்றியுள்ளனர்.

பல கவிஞர்களும் பல பாடல்கள் வெளியிட்ட போதிலும் வள்ளியப்பா அவர்கள் மரபுப் பாடல்களும், மரபு ஒட்டாத பாடல்களும், குழந்தைகள் தாமே பொருள் புரிந்து பாடும் பாடல் பலவற்றை இயற்றினார். இவர் இராண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தை பாடல்கள் எழுதியுள்ளார்.

வள்ளியப்பா அவர்கள் காந்தியடிகள், மற்றும் நேரு ஆகியோரின் வரலாறுகளை எழுதியுள்ளார். 'வள்ளியப்பா அவர்கள்' குழந்தைகளே பாடும் முறையில் அவர்தம் மொழியிலேயே பாடியிருக்கிறார். தமிழில் பெரிய குழந்தை இலக்கியமே உள்ளது என்று சொல்லும் அளவிற்கு பெருமை சேர்த்தவர் அழ.வள்ளியப்பா அவர்கள்.

மலரும் உள்ளம், சின்னச் சின்ன பாடல்கள், காந்தி மகான் கதை, பாப்பா பாட்டு, ஆகிய தொகுதிகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

" மனித ருக்குள் மாணிக்கம்
மக்கள் போற்றும் தலைவராம்
புனித மான விடுதலை
பெறவு ழைத்த ஜவஹராம்"

என்று மிகவும் எளிமையாக சொல்கின்ற கருத்து மிகவும் இனிமையாக இருக்கும் அளவிற்கு எழுதி நாட்டில் பல செயல்கள் செய்தது போற்றுதலுக்குறிய மனிதராம் வள்ளியப்பா.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later