New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
ஞானியார் அடிகளார் 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
கடலுரில் தலைமை பீடத்தை வைத்துக்கொண்டு தமிழ் நாடெங்கும் சைவத் தொண்டும், தெய்வத்தொண்டும் தென்பொதிகை தமிழ்த்தொண்டும் சிறந்தவராய் விளங்கியவர் ஞானியார் அடிகளார் ஆவார், தவஞானச் செல்வமும் பன்மொழிப்புலவரும் என்று சொன்னால் எல்லோருடைய புருவமும் உயரும் சொல் வன்மை மிக்கப் பேச்சாளர் இவர் 1873 ஆண்டு திருநாகேசுரத்தில் தோன்றினார். பெற் றோர் இட்ட பெயர் பழனி என்பதாகும்.

திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் மடாலயத்து நான்காம் பட்டத்து சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் தமது உறவினரான பழனியின் தந்தையை திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துக்கொண்டார். அப்பொழுது பழனி ஆறுமாத கைக்குழந்தை.

திருப்பாதிரிப்புலியூரில் மடாலயம் திருக்கோலுர் ஆதினத்தின் ஒரு கிளையே, செஞ்சி. விருத்தாசலம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களிலும் இவ்வாதினத்திற்கு கிளைகள் உண்டு நான்காம் பட்டத்து அடிகளாருக்கு உடல் தளர்ச்சியுற்றது. எனவே பழனியின் பள்ளிப் படிப்பை நிருத்தி பழனியை துறவு பூன வைத்தார்கள்.

அதன்படி பழனி, 1889 ஆண்டு ஞானியார் மடத்தின் தலைவராகப் பட்டம் சூட்டினார்கள். சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய என்னும் பட்டமும் ஈர்ந்தார். நான்காம் பட்டத்து அடிகளார் சிவனடி எய்திய பின் சிவசண்முக சிவாசாரிய சுவாமிகள் தமது பதினேழாவது வயதில் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளானார்.

வான்கிழித்துக் கொட்டும் மழைபோன்று ஞானியார் அடிகளாரின் சொற்பொழிவாற்றல் நான்கு ஐந்து மணிநேரம் அடாது மழை விடாது பெய்வதைப்போல் பேசும் ஆற்றலைப் பெற்றார். மக்களோ இவரின் பேச்சினை மனச் சோர்வின்றி கேட்டு மகிழ்ந்தனர். தமிழும், சைவமும் தழைத்தினிது வளரச்செய்தார். பல ஊர்களில் சென்று பேறுரை ஆற்றி வந்தார் சமயத்திலும் தமிழ் ஆர்வம் கொள்ள வைத்தார். சொற்பொழிவுகள் ஆற்றிய நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு பாடம் புகுட்டி வந்தார். பல திருக்கோயில்களின் நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டு வந்தார்.

தமிழ் வளர்ச்சிக்கு பலரைத் துண்டி சங்கங்கள் ஏற்படுத்தினார், மதுரைச் தமிழ்ச்சங்கம் சைவசித்தாந்த மகா சமாஜம் அவற்றுள் சில கல்வி பணியிலும் ஈடுபட்டு பாடலேசுவரர் தரும பாடசாலை 'ஞானியார் பாடசாலை' போன்ற பள்ளிகளை ஏற்படுத்தினார்.

ஞானியார் அடிகளார் திலகவதி அம்மைதுதி, ஞான தேசிக ம்ாலை என்கின்ற நுல்கள் இயற்றியுள்ளார். அடிகளார் தமிழ்நாடெங்கும் சுற்றித்திரிந்து சொற்பொழிவுகள் ஆற்றுவதிலேயே தன் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டு வந்ததால் அவர் அதிகமான நுல்கள் இயற்றவில்லை. மேலும் அவர் திருப்பாதிரிப்புலியூர் புராணத்தை பதிப்பித்திருக்கிறார்.

மும்மொழி மேதை என்று அழைக்கப்படும் ஞானியார் அடிகளார் அவர்கள் 1-2-1942- இல் ஓய்வு பெற்றார்.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later