New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
 சிலம்புச் செல்வர் ம.பெ. சிவஞானம்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
ma.po.si'பிறமொழி மாநிலங்களோடு உவாடுவோம் ஆனால் தமிழுக்கு உயிர் கொடுப்போம்' என்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்தவர் ம.பொ.சி என்றால் மிகையாகாது. ம.பொ.சி என்று சொன்னாலே உலகத் தமிழ்மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் உழைப்பாளி, தொழிலாளி பகுத்தறிவாளர், பிற மொழிகளுக்கு அணைபோட்ட ஆணையாளர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ம.பொ.சி. அவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர்.அவர் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அப்போது அவர் தமிழ் மொழியை ஆர்வமுடன் பயின்றார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று வீர குரல் எழுப்பிய தமிழ் தாகம் தனியாதவர் ம.பொ. சிவஞானம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று வீரவுணர்வு கொண்டிருந்தார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காகப் ஈடுபட்டு பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

சிறையில் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தார். அதனால் அவருக்கு மிகக் கொடிய நோயான வயிற்று நோய் வந்தது அதற்கு மருந்து தமிழென சிலப்பதிகாரம் கம்பராமாயணம் இரண்டையும் முழுமையாக சிறையிலேயே கற்று தெளிந்தார். தமிழே அவருக்கு நோய் போக்கும் மருந்தானது.

பாரதியின் பாடல் நெஞ்சுறுதியையும் ஊக்கத்தையும் தந்தன. பாராதியின் பாடல்கள் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றை தமிழக மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று மக்கள் மனதில் நன்கு அழுத்தமாக பதியவேண்டும் என எண்ணினார் அதன் படியே செயல்பட்டு பயனடையச் செய்தார்.

சிலப்பதிகாரத்திற்கு அவரைச் சொந்தக்காரர் என்றே சொல்லலாம் அதனால்தான் அவரை சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் முரசு, செங்கோல் முதலிய இதழ்களின் மூலமாகத் தமிழ்செல்வத்தை வாரி வழங்கினார். தமிழ் அரசுக் கழகம் என்னும் ஒரு அரசுக் கழகத்தை உருவாக்கித் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டார். பலரும் சென்ற பாதையிலே செல்லாமல் சிலப்பதிகாரத்திற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தந்தார். மிகச் சிறந்தபோச்சாளராக திகழ்ந்தார்.

மாநிலத்தின் பல பகுதிகள் கேரளத்துடனும் ஆந்திர மாநிலத்துடனும் இணைவதை எதிர்த்து எல்லை எதிர்ப்பு போர் நடத்தினார்.

மிகச் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார் ஆதலால் சிலப்பதிகாரத்தைப் பற்றிய பல நுல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

வடலுர் இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பாக்களை மிகச் சிறந்த முறையில் ஆராய்ந்து நுல் ஒன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் பயிற்று மொழி தமிழாகவே இருக்க என்று வேண்டும் வற்புறுத்தி நுல் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பிற மொழியினர் தேசியம் வளர்த்த தமிழ் சுதந்திரத்திற்குப்பின் தமிழ் வளர்த்த வரலாறு போன்ற பல நுல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு மேல்சபையில் அவைத் தலைவராக இருந்து சிறந்த முறையில் அவையை நடத்தினார். மொரீஷியஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலான நாடுகளுக்கு பயணம் செய்து தமிழ் மொழிகளின் அருமை பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். பரந்த தேசிய நோக்குடனும் தமிழ்மொழிக் காதலாராகவே விளங்கினார்.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later