இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தபோது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். தன் பேச்சில் நகைச்சுவை ததும்புவதோடு தமது கவிதைகளை உணர்ச்சி ததும்பவும் எழுத்தக் கூடியவர். இவர் இயற்பெயர் வே.ராமலிங்க பிள்ளையாவர் 1878 ஆம் ஆண்டு நாமக்கலில் பிறந்தார். எனவே இவரை நாமக்கல் கவிஞர் என்று அழைக்கிறர்ாகள்.
நாமக்கல் கவிஞர் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டு வந்தார். இவர் தமது வரலாற்றை 'என் கதை' எனப் பெயரிட்டு நுலாக வெளியிட்டார். நகைச்சுவையாக பேசக்கூடிய நாமக்கல் கவிஞர் தமது எழுத்துக்களில் நகைச்சுவை ததும்ப எழுதினார்.
நாட்டுரிமைக்காக போராடிய அவர், உப்பு வரியை எதிர்த்து காந்தியடிகள் போராட்டம் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் உப்பு வரியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்திற்கு'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற கவிதை ஒன்றை எழுதிக் கொடுத்து தானும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். நாமக்கல் கவிஞரின் இந்த வரிகள் மக்கள் மனதில் பெரும் உணர்ச்சியைத் துண்டி, ஆழமாக மனதில் பதிந்தது. அதன் பிறகு நாமக்கல் கவிஞர் பெரும் புகழ் எய்தினார்.
'அவனும் அவளும்' என்ற கதைநுல் நாமக்கல் கவிஞர் படைத்த ஒர் அழகிய காப்பிய நுலாகும். அவர் உணர்ச்சிவசமான சில வரிகள் இன்னும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" போன்ற வரிகள் நாமக்கல் கவிஞரை நினைவூட்டுகின்றன. நாமக்கல் கவிஞர் திருக்குறளுக்கு ஒரு உரை எழுதியுள்ளார். ஆனால் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கினார்.
பாரதியாரை நேரில் பார்த்தபோது பாராதியார் கூறினாராம், "பாண்டியா, எம்மை நீ ஒவியத்தில் தீட்டு, உன்னை காவியத்தில் தீட்டுகிறேன்" மிகவும் வெற்றிபெற்ற பாடல் 'தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு என்பதாகும். இந்தியா விடுதலைப் பெற்றபின் தமிழ்நாட்டு அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மேலவை உறுப்பினராகவும் பதவியேற்றார்.