New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
  கவிஞர் திருலோக சீதாராம்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
Thirulogaseetharamபாரதியாரின் 'பாஞ்சாலி சபத'த்தை இந்தக் கவிஞர் பாடும்போது கேட்டவர் மெய் மறந்து நிற்பார்கள். இத்தகைய உணர்ச்சி மிக்க அருங்கவியை நாம் இழந்து இத்தகைய உணர்ச்சி மிக்க அருங்கவியை நாம் இழந்து இன்று ஓராண்டு ஆகிறது! சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்து மூன்றாம் தேதியன்று ஒரு சிறந்த கவிஞர் இயற்கை எய்தினார். தன்னம்பிக்கை மிக்க அந்த உழைப்பாளி ஒரு நல்ல மனிதருங்கூட.

மகாகவி பாரதிக்குப் பிறகு அவரது நெறி தழுவிய கையளவு கவிஞர்களின் கடைமசித் துணும் சாய்ந்தது. தம்மைப் பாரதியின் ஆன்மிக புத்திரன் என்று அவர் துணிவுடன் கூறிக்கொண்டார். அதுமட்டும் அன்று. பாரதியாரின் மனைவியார், மகள், பேத்தி ஆகியோரைத் தம் குடும்பத்தாராகவே நடைமுறை வாழ்க்கையிலும் பாவித்தார். பாரதியாரின் மனைவியார் அவரது மடியிலேயே தலை வைத்து உயிர் நீத்தார். தம் மூத்த மகளின் திருமணத்தின்போது தங்கம்மாள் பாரதிக்குத்தான் கவிஞர் முதல் மரியாதை கொடுத்தார். கவிஞரைத் தமிழுலகு நன்கு அறியும். அவருடைய பெயர் திருலோக சீதாராம் (திருவையாறு லோகநாத சீதாராம்).

சிறு வயதிலிருந்தே தேசிய இயக்கத்திலும், கவிதை இயற்றுவதிலும் எல்லையற்ற ஈடுபாடு. பத்திரிகை நடத்திக் கையைச் சுட்டுக் கொண்டவர்களில் இவருக்கு முதல் வரிசை. 'ஆற்காட்டுத் துதனில் தொடங்கினார். கடைசியில் 'சிவாஜி'யின் ஆசிரியராகவே மறைந்தார். சிறுகதை மன்னர் கு.ப.ரா., இவருடைய 'கிராம ஊரிய'னில் பணியாற்றினார். அதில் இவருக்கு அதிகப் பெருமை. "நாங்கள் மூன்று தெலுங்கர்கள் கூடி மிகச் சிறந்த தமிழ்ப் பத்திரிகை நடத்தினோம்" என்று கூறிச் சிறு குழந்தையைப் போல் மகிழ்ச்சியுறுவார்.

கவிஞரின் தாய் மொழி தெலுங்கு, அந்த மொழியிலும் கவிதை இயற்றும் ஆற்றல் இவருக்கு இருக்கிறது. இவர் குறிப்பிட்ட இன்னொரு தெலுங்கர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள்.

தேசீய இயக்க வேகம் தணிந்து தம் மூதாதையரின் சொத்துக்களில் பெரும் பகுதியைக் 'கரி' யாக்கிய பிறகு (திருவையாற்றில் மட்டும் இவருக்கு நான்கு சொந்த வீடுகள் இருந்தன) இலக்கிய மேடைகளில் கவிஞராகவும் பேருரையாளராகவும் ஒளிர்ந்தார். இலக்கிய ரசிகர்களில் மேல்மட்டத்தினர் அனைவரும் இவரது சொல்லாற்றலில் சொக்கிப்போவது வழக்கம். 'பாஞ்சாலி சபத'த்தை இவர் வாய் மூலம் கேட்டு உருகியவர் அநேகர். கவிஞரின் நினைவாற்றல் வியக்கத் தக்கது. நல்ல வேளையாகத் திருச்சி வானொலி நிலையம் இவருடைய குரலைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.

பல பத்திரிகைகள் நடத்திய பிறகு 1935-இல் 'சிவாஜி' வார ஏட்டின் பொறுப்பை ஏற்றார். முப்பத்தராண்டு ஆண்டுகள் அது தவறாமல் வெளி வந்தது. ஆர்வமுள்ள பல நண்பர்கள் அதை ஓர் இலக்கிய ஏடாக ஆக்கும் பொருட்டு மாத இதழாக மாற்றினார்கள். "தையகல ஏடு எனக்கு இருப்பதனால்தான் நான் சுதந்தர வாழ்வு வாழ முடிகிறது" என்று அவர் துணிவுடன் கூறுவார். ஆக்கத்திறனுள்ள பல எழுத்தாளர்களைத் துண்டி அவர் சிறந்த ஆண்டு மலர்களை வெளியிட்டிருக்கிறார்.

கவிஞர் பாரதிதாசனிடம் அவருக்கு எல்லையற்ற பிடிப்பு. பாரதிதாசனின் அறிவியக்கக் கொள்கை அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கவிஞர் என்ற முறையில் இந்த இரண்டு ஆத்மாக்களும் ஒன்றிவிடும். பாரதிதாசனின் 'முருகன் துதிமாலை'யை நம் கவிஞரின் வாய்மூலம் கேட்டவர்கள் பெரும் பாக்கியசாலிகள். பாரதிதாசனுக்குப் பொற்கிழி அளிக்கும் நிகழ்ச்சியில் எல்லோரும் கடைசி நிமிஷத்தில் நழுவிவிட்டார்கள். ஆனால் கவிஞர் அதை முன்னின்று நடத்திவைத்தார்.

அவர் 'தேவசபை' ஒன்று அமைத்திருந்தார். தமிழ் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் பலர் அதில் உறுப்பினர்: பாரத நாட்டின் பழம்பெரும் நுல்களில் உள்ள உண்மைகளை எல்லாம் கடைத்தெடுத்து அநுபவிக்கும் பொருட்டு இவர்கள் ஒன்றுகூடுவது வழக்கம். குழுமிய பிறகு இவர்கள் ஏற்றுக் கொண்ட களிவெறி பல நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இதன் உறுப்பினர்களுக்கு 'அம்ருத' என்ற அடைமொழி உண்டு. இந்த அவைகள் அனைத்திலும் இவர் வற்புறுத்திய கருத்து ஒன்றுதான்: "இன்பம், இன்பம் என்று எதையோ நாடி அலைகிறான் மனிதன். உண்மையான ஆனந்தம் எங்கும் நிரம்பிக் கிடக்கிறது. அதைப் பெறும் வழி, தன்னை அறிவது ஒன்றுதான். அந்த முயற்சியின் வெளிவடிவங்கள் தாம் நம் வேதங்களும் உபநிடதங்களும். பண்டைய முனிவர்களில் அநுபவங்களிலிருந்து நாமும் பயன் பெறலாம்".

தனிப்பாடல்களைத் தவிர, 'குருவிக்கூடு', 'கந்தருவ கானம்', 'உடையவர்' என்ற நீள் கவிதைகளையும் இவர் எழுதினார். இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொறுப்பைத் திரு. தி.ந. ராமசந்திரன் ஏற்றுக்கொண்டார். தேசிய சக்திகள் நசிவுறுவதையும், சமுதாய மதிப்புக்கள் குன்றுவதையும் கண்டு இந்தக் கவிஞர் மெளனமாகக் கண்ணீர் வடித்தார்.

கவிஞரின் 'கந்தருவகான'த்துக்குச் சாகித்திய அகாதமிப் பரிசு கிடைப்பதாக இருந்தது என்கிறார்கள். ஆனால் ஏனோ அது நிறைவு பெறவில்லை. இதனாலே அவருடைய ரசிகர்களுக்கெல்லாம் தாங்கொணாத வருத்தம்.

போகட்டும் ; டால்ஸ்டாய்க்கும், காஃப்காவுக்குங்கூடத்தான் நோபெல் பரிசு தரப்படவில்லை அதனால் என்ன!

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later