New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
T.P.Meenakshisundaram1901 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் சிந்தாதிரிப்பேட்டையில் தோன்றினார். தெ.பொ.மீ.யின் முன்னோர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

இவருடைய தந்தையார் பொன்னுசாமி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரா அட்டாவதானம் சுப்பராய செட்டியாரிடம் தமிழ் பயின்றவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவாக மீனாட்சி சுந்தரம் எனப் பெயர் சூட்டப் பெற்றார்.

கோவிந்த நாயக்கர் இடைநிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை உயர் நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியைக் கற்றுப் பதினைந்தாம் வயதிலேயே பள்ளி இறுதி தேர்வில் வெற்றிபெற்றர்ர். 1920 ஆம் ஆண்டில் பி.ஏ. பட்டமும் 1922 ஆம் ஆண்டு பி.எல். பட்டமும் 1923 ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.

1923 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். நாட்டுப்பற்றும், தமிழ்ப் பற்றும், சமயப் பற்றும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வமும் அவரிடம் போட்டியிட்டு வளர்ந்தன. 1924 ஆம் ஆண்டு சென்னை நகராண்மை கழக உறுப்பினராகப் பொறுப் பேற்றார். 1936 ஆம் ஆண்டு சென்னை நகராண்மைக் கழகச் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944 ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஆணைப்படி மறியல், போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

தெ. பொ. மீ. முற்போக்குச் சிந்தனையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர். 1916 ஆம் ஆண்டில் அரிசனங்களுக்கு இரவுப் பள்ளிக்கூடம் நடத்தத் தலைப்பட்டு, நெடுங்காலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். 1923 ஆம் ஆண்டு அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 1935 ஆம் ஆண்டு ழிணீவீஷீஸீணீறீ ஷிணீக்ஷீ மிஸீக்ஷீணீஸீநீமீ நிறுவனத்தின் தலைவராகவும், 1936 ஆம் ஆண்டு வேதாந்த சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்றுத் தொண்டாற்றினார். 1929 ஆம் ஆண்டு முதல் இறுதிநாள் வரை சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலாளராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

கொழும்பில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாடு, திருவாவடுதுறை திருமந்திர மாநாடு, திருவனந்தபுரம் சைவ சித்தாந்த மாநாடு ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார். 1974 ஆம் ஆண்டு முதல் ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபாடு கொண்டார். இக்குழுவின் இந்திய நாட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.

கல்லுரியில் வரலாற்றையும், சட்டத்தையும் முறையாகப் படித்தாலும் தமிழ்பால் உள்ள பற்றால் மகாவித்துவான் கோ.வடிவேல் செட்டியாரிடம் தமிழ் பயின்றார். வித்துவான் புகுமுகத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டையும் ஒரு சேர எழுதி மாநிலத்திலேயே முதல் மாணாக்கராக வெற்றி பெற்றார். தமிழ் ஒலியை ஆய்ந்து எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், இந்தி ஆகிய இந்திய மொழிகளையும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மன் ஆகிய அந்நிய மொழிகளையும் கற்றுப் பன்மொழிப் புலவர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

தெ.பொ. மீ., இலக்கியம், இலக்கணம், மெய்ப்பொருள், வரலாறு, மொழியியல், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். சென்னை மாநிலக் கல்லுரியில் மூன்றாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டிலிருந்து ஈராண்டு காலம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மீண்டும் 1958 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தோற்றுவித்து வளர்த்தார். 1961 ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி மேற்கொண்டார். 1966 ஆம் ஆண்டு மதுரைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்றுப் பல்கலைக் கழகத்தை உயர்நிலைக்குக் கொணர்ந்தார். 1973 ஆம் ஆண்டு திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக விளங்கினார்.

தருமபுர ஆதினம் இவருக்கு 'பல்கலைச் செல்வர்' என்ற பட்டத்தையும், திருவண்ணாமலை மடம் 'பன்மொழிப் புலவர்' என்ற பட்டத்தையும் கேடயத்தையும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை 'பெருந்தமிழ்மணி' என்ற பட்டத்தையும் பொற்பதக்கத்தையும் வழங்கின. 1958 ஆம் ஆண்டு பூ.ச.கோ. கலைக் கல்லுரியினர் பொற்கலனையும், கோவை நன்னெறிக் கழகத்தின் பொற் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்தனர். 1967 ஆம் ஆண்டு மதுரைப் பல்கலைக் கழகமும், 1976 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகமும், 1979 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் டி.லிட். பட்டம் அளித்துச் சிறப்பித்தன. 1977 ஆம் ஆண்டு நடுவண் அரசு 'பத்மபூசன்' விருதையும், 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு 'கலைமாமணி' விருதையும் வழங்கிப் பாராட்டின.

தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்புக் குழுவிலும், தமிழ் வளர்ச்சிக் கழகத்திலும், தமிழ்க்கலை மன்றத்திலும், சாகித்ய அகாடெமியிலும், இந்திய மொழியியல் கழகத்திலும், திராவிட மொழியியல் கழகத்திலும் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்தார். ஆய்வரங்குகளையும், கருத்தரங்குகளையும் கூட்டித் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தொடக்கி வைத்து வளர்த்தார்.

பேச்சாற்றலுடன் எழுத்தாற்றலும் பெற்ற தெ.பொ. மீ. பல்வேறு கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகள் பின்னாளில் தொகுக்கப் பெற்று நுல் வடிவம் பெற்றன. இவர் படைப்பில் செம்பாதி ஆங்கிலக் கட்டுரைகளாகும். இவருடைய ஆய்வு நுலான விறீறீணீவீ-ஜீ-ஜீணீ 1952 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நுலுக்கான விருதைப் பெற்றது.

பல்வேறு நிலைகளில் சமுதாயத் தொண்டாற்றிய தெ. பொ. மீ. 1980 ஆம் ஆண்டு 'ஆகசுடு'த் திங்கள் 28 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later