செய்தித்தாள்கள்களில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக்குறவஞ்சி எழுதப்பட்டது. நமச்சிவாயப் புலவர் - கட்டபொம்மனைப் புகழும் கலியுகப் பெருங்காப்பியம் 4000 செய்யுளைக் கொண்டது. ஆனால் அச்சேறவில்லை. கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கும்மி, இராமநாதபுரம் பேட்டி விருத்தம், சகவீரபாண்டியரின் வீரபாண்டியம், சிவகங்கை சரித்திரக் கும்மி, அம்மானை போன்றவை - அடக்கு முறையைப் பொருட்படுத்தாது வெளிப்பட்ட விடுதலை வேட்கை இலக்கியங்களாகும்.
கோபாலகிருட்டிண பாரதியார் - நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, தீண்டாமை - சாதிக்கோட்பாடு, முதலாளி எதிர்ப்பு உள்ளடக்கியது.
கி.பி. 1831
சென்னையிலிருந்து கிருத்துவப் பிரச்சாரக் கழகத்தார் செய்தி இதழை வெளியிட்டனர்.
கி.பி. 1833
முதல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு விருத்தாந்தி செய்தித்தாள் வெளிவந்தது.
கி.பி. 1835
மதராசு கிராணிக்கிள்.
கி.பி. 1840
பாளையங்கோட்டையிலிருந்து நற்போதகம்.
கி.பி. 1841
இராமானுச கவிராயர் திருக்குறளை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டார். தாமோதரன் பிள்ளை கலித்தொகை, சூளாமணி, தொல்காப்பியம் முதலியவற்றை வெளியிட்டு தமிழ்ச்சங்கங்களின் கால நிர்ணயம் செய்தார். வள்ளல் சீதக்காதி இராமநாதபுரம் சேதுபதியிடம் அரசுப் பணியாற்றியவர். இயற்பெயர் செய்யது அப்துல் காதர். அவருடைய நண்பர் உமறுப்புலவர் - சீறாப்புராணம் படைத்தார்.
கிறுத்துவத்தால் கவர்ப்பட்ட கிருட்டிணப்பிள்ளை இராட்சண்ணிய யாத்திரீகம் எழுதினார்.
முருகதாச சுவாமிகள் - திருப்புகழ், கோவை, கலம்பகங்கள் படைத்தார். வண்ணக்கவி இயற்றும் வல்லமையும் பெற்றிருந்தார்.
முதல் தமிழ் ஏடு நாகர்கோவிலிலிருந்து வெளிவந்தது.
கி.பி. 1841
கவிசேசபர பாவ விளக்கம்.
கி.பி. 1845
உதயதாரகை
கி.பி. 1849
குழந்தைகள் இதழ் தேசத்தோழன்
கி.பி. 1855
தினவர்த்தமானி மாத இதழ்
கி.பி. 1861
தேசோபகாரி
கி.பி. 1864
தத்துவபோதினி
கி.பி. 1879
நாட்டு மக்கள் கருத்து, உயர்நிலைப் பள்ளி
கி.பி. 1882
சுதேசமித்திரன்
கி.பி. 1888
இந்துநேசன்