எல்லிசு என்பவரின் தமிழாய்வு - ஒப்பிலக்கணத்து முன்னொடியாகும். இரேனியசு அங்கிலத்தில் தமிழ் இலக்கணத்தைப் படைத்தார். அது வீரமாமுனிவரின் இலக்கண நூலை விடத்தெளிவாக இருந்தது. போப்பையர் வினாவிடையால் இலக்கணம் எழுதினார்.
அச்சுக்கலையை தமிழில் உருவாக்கியவர்களும், அகராதிகள் படைத்தவர்களும் ஐரோப்பியர்களே ! வீரமா முனிவரின் சதுரகராதி, போத்துக்கீசிய இலத்தீன், தமிழகராதி, தமிழ் இலத்தீன் அகராதி, பிரெஞ்சு அகராதி. தமிழ் அகராதி - அவர்களின் படைப்பு.
சீகன்பால்கு செர்மானிய மொழியிலிருந்து மொழிபெயர்த்தப் பாடல்கள் தமிழில் தோன்றிய முதல் கீர்த்தனை நூலாகும். வீரமாமுனிவரின் தேம்பாவணி, சீவகசிந்தாமணி போன்றதொரு காப்பிய நூலாக அமைந்தது. வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீனில் மொழி பெயர்த்தார். ஏரியல் திருக்குறளைப் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார். டாக்டர் கிரால் திருக்குறளைச் செர்மானிய மொழியில் மொழி பெயர்த்தார். டாக்டர். சி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.