புகழ்பெற்ற துறை : கவிஞர், அரசியல்
தோற்றம் - 11-12-1882
இவர் திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவர். இவர் பெற்றோர்கள் திரு.முத்துவேலர்-திருமதி அஞ்சுகம் அம்மையார் ஆவர்.
தன் பதினான்காவது வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டவர். 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' என்ற திராவிட இயக்கத்தின் முதலாவது மாணவர் பிரிவைத் தோற்றுவித்தவர்.1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்த உறுப்பினர்களில் இவரும் ஒருவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றப் பேரவை / மேலவை உறுப்பினராக இருந்தார்.1957 -முதல் 2006 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களிலும் வென்றுள்ளார்.
பல அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்., இரயில்வே நிலையப் பெயர் மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.
வகித்த பதவிகள்
தி.மு.க.வின் பொருளாளர்-1961,
தி.மு.க. தலைவர்-1969 முதல்.
சட்டப் பேரவை உறுப்பினராக--
குளித்தலை .. 1957-1962
தஞ்சாவூர் .. 1962-1967
சைதாப்பேட்டை .. 1967-1971
சைதாப்பேட்டை .. 1971-1976
அண்ணா நகர் .. 1977-1980
அண்ணா நகர் .. 1980-1983
துறைமுகம் .. 1989-1991
துறைமுகம் .. 1991 (ராஜினாமா செய்தார்)
சேப்பாக்கம் .. 1996-2001
சேப்பாக்கம் .. 2001-2006
சட்டமன்ற மேலவை உறுப்பினர் -- 1984-1986
பொதுப்பணித் துறை அமைச்சர் 1967- 1969
தமிழ்நாட்டின் முதலமைச்சர். 1969 - 1971 ,
தமிழ்நாட்டின் முதலமைச்சர். 1971 - 1976 ,
தமிழ்நாட்டின் முதலமைச்சர். 1989 - 1991 ,
தமிழ்நாட்டின் முதலமைச்சர். 1996 - 2001 ,
சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக 1977 - 1983
1983-ல் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகப் போராடும் வகையில் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
பட்டங்களும், விருதுகளும்
1971-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் 'முனைவர் ' பட்டம்; தி கவுன்சில் ஆப் டாக்டர் ஆப் பிலாஸபியால் வழங்கப்பட்ட 'தமிழவேள்' பட்டம்; "தென்பாண்டி சிங்கம்" என்ற நூலுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட 'இராஜராஜன் ' விருது.
வெளிநாட்டுப் பயணங்கள்
பிரிட்டன், பிரான்சு, மேற்கு ஜெர்மனி, ரோம் போன்ற ஐரோப்பிய நாடுகள்; அமெரிக்க ஐக்கிய நாடுகள்; மலேசியா. 1970-ல் பாரீஸ் நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டின் துவக்க நாளில் சிறப்புரை ஆற்றினார். 1987-ல் மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டின் துவக்க நாளில் சிறப்புரை ஆற்றினார்.
பொழுது போக்கு
படித்தல், எழுதுதல் மற்றும் கலந்துரையாடல்.
வெளியீடுகள்
ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, சங்கத் தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், திருக்குறள் உரை மற்றும் உரைநடையிலும் கவிதையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள்.
எழுதிய மேடை நாடகங்கள்
மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப் பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் மற்றும் பல.
எழுதிய திரைக்கதைகள்
ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகன். தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப்பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர். குறவஞ்சி, தாயில்லாப் பிள்ளை. காஞ்சித் தலைவன், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்கமுடியுமா? அவன் பித்தனா? பூக்காரி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், நியாயத் தராசு போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட திரைக்காவியங்கள்.
பொது மற்றம் சமூக ஈடுபாடுகள்
இவரால் உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்:- பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளி திட்டம், முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம். கைரிக்ஷாக்களை ஒழித்தது. குடிசை மாற்று வாரியம், குடும்ப நலத் திட்டம், பெண்களுக்கும் சம சொத்துரிமை சட்டம். ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 10,000 திருமண உதவி, கலப்புத் திருமணத்திற்கும் விதவைத் திருமணத்திற்கும் ஊக்கத் தொகை. ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, ஆதிதிராவிடர் இலவச வீட்டுத் திட்டம், பிற்பட்டோர் நலனுக்கும் தனித் துறைகளைத் தோற்றுவித்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருபது சதவிகித தனி ஒதுக்கீடு. மாநில திட்டக் குழு அமைத்தது போன்ற பல திட்டங்களாகும்.
உருவாக்கிய கட்டிடக் கலை
தில்லையாடி வள்ளியம்மை நகர், கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா அறிவாலயம்.
மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர், நிர்வாகி, நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், எழுத்தாளர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த கவிஞர் மற்றும் ஜனநாயகவாதி. 'குடியரசு' பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 'முத்தாரம்' சஞ்சிகைக்கு உயிரூட்டினார்.
தனது சிறுவயதிலேயே 'முரசொலி ' என்ற பத்திரிகையை, முதலில் மாத இதழாக பின்னர் வார இதழாக, பின் நாளிதழாகத் துவக்கி நடத்தியவர். இப்பத்திரிகையே தற்போது இவருடைய எண்ணங்களை, எழுத்தை, சிந்தனையை, குரலை வெளிப்படுத்தும் இதழாக வந்து கொண்டிருக்கிறது. மாநில அரசின் செய்தி வெளியீடாக வரும் படச் செய்தி சுருளை தோற்றுவித்தவர் இவரே, அரசு இதழான 'தமிழரசு ' இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் தோற்றுவித்தவர் இவரே. எல்லோராலும் அன்பாக 'கலைஞர்' என்று அழைக்கப்படுபவர்.