New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » புகழ் பெற்ற தமிழர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
புகழ் பெற்ற தமிழர்கள்
உவமைக் கவிஞர் சுரதா 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 

புகழ்பெற்ற துறை : கவிஞர்

தோற்றம் - 23.11.1921
மறைவு - 11.06.2006

Suratha

இவர் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள பழையனூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் பெற்றோர்கள் திரு.திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர்.

இராசகோபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் சுரதா ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரிலேயே படித்தார். ஆறாம் வகுப்பு முதல் மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராஜாமடத்தில் படித்தார். ராஜாமடம் பள்ளியில் இவரோடு கல்வி பயின்றவர்களில் சிலர்: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், தமிழறிஞர் இலக்குவனார்.

இவரின் முதல் சிறுகதை  'கவி அமரன்'. இது நாரண துரைக் கண்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பிரசண்ட விகடன் வார இதழில் வெளிவந்தது".

இவர் பாரதிதாசன் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக சுப்புரத்தினதாசன் என்று தன் பெயரை வைத்துக் கொண்டார். பின்பு அதனைச் சுருக்கி 'சுரதா' வானார்!

1941ம் வருஷம் பாவேந்தர் பாரதிதாசனின் உதவியாளனாகச் சேர்ந்து 1942ம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பும் வகையில் அமைக்கப்பட்ட 'முத்தமிழ் நிலையம்' நாடகக் குழு முதல் நாடகமாக பாரதிதாசனின் புரட்சிக்கவி நாடகம் தமிழ் நாடு முழுதும் நடத்தப்பட்டது. அதில் அமைச்சர் வேடத்தில் இவர் நடித்தார்.  தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், இரத்தினசாமிப் பிள்ளை ஆகியோரின் தலைமையில் நடந்த புரட்சிக் கவி கவிதை நாடகம் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகராக நாடகத்தில் அறிமுகமான சுரதாவின் பல நாடகங்கள் திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாயிருக்கின்றன. அவற்றுள் ஒன்றான 'சுஜாதா' நாடகம் பெரும் பாராட்டுகளைப் பெற்றதோடல்லாமல் அவருக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது.

மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு முதன் முதலில் சுரதா வசனகர்த்தாவானார். இவரை வசனகர்த்தாவாகத் தேர்ந்தெடுத்தவர் அப்பொழுது பிரபல கதாநாயகனாக விளங்கிய பி.யு.சின்னப்பா.

மங்கையர்க்கரசி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மிகக் குறைந்த வயதில் சுரதா வசனம் எழுதிய முதல் படத்திற்கு கிடைத்த வெற்றி அவருக்குப் பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அக்காலத்தில் உரையாடல் கலையின் பேரரசனாக விளங்கிய இளங்கோவன் சுரதாவின் வசனத்திறனை பெரிதும் பாராட்டினார். இது அவருடைய எழுத்துத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாயிற்று.

மங்கையர்க்கரசிக்கு தமிழ்த் திரையுலகில் இன்னொரு சிறப்பும் உண்டு. நுல் வடிவம் பெற்ற முதல் சினிமா கதை வசனம் அதுதான். பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை ஆகிய இருவரின் வாழ்த்துரையுடன் வெளிவந்த மங்கையர்க்கரசி கதை வசனப் புத்தகம் அக்காலத்தில் பரபரப்பாக விற்பனையானது.

உவமைக் கவிஞர் சுரதாவைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்:


* சுரதாவுக்கு 'உவமைக் கவிஞர்' என்ற பட்டம் வழங்கியவர் எழுத்தாளர் ஜெகசிற்பியன்

* உவமைக் கவிஞரின் முதல் கவிதை நுலை வி.ஆர்.எம். செட்டியார், 1946ம் ஆண்டு ஸ்டார் பிரசுரம் வெளியீடாகக் கொண்டு வந்தார். நுலின் பெயர்: 'சாவின் முத்தம்'.

* 1955ல் முழுதும் கவிதை வடிவிலேயே 'காவியம்' என்ற வார இதழை நடத்தினார். உலகின் 'முதல் கவிதை வார இதழ்' என்ற பெருமை இதற்குண்டு.

* 1965ல் சுரதாவின் புகழ்பெற்ற 'தேன்மழை' கவிதை நுல் வெளியானது. இந்நுலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

* 1972ல் தமிழக அரசு சுரதாவுக்கு கலைமாமணி பட்டம் வழங்கியது.

* 1987ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு பாவேந்தர் விருதுத் திட்டத்தை ஏற்படுத்தியது. முதல் பாவேந்தர் விருது சுரதாவுக்குத்தான் வழங்கப்பட்டது.

* 1980-82ல் தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவுக்கு இருமுறை நீண்ட கால இலக்கியச் சுற்றுப்பயணம் நிகழ்த்தியுள்ளார்.

* 1982ல் சுரதாவுக்கு இலக்கிய அன்பர்களால் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவும், அறுபதாயிரம் நிதியளிப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பெற்றன.

* 1987ல் மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட உவமைக் கவிஞரை உலகத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவராக்கி மகிழ்ந்தனர் உலகத் தமிழ்க் கவிஞர்கள்.

* 1990ல் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கலைத்துறை வித்தகருக்கான பாரதிதாசன் விருதை அறிமுகப்படுத்தியது. முதல் விருது சுரதாவுக்கு வழங்கப்பட்டது.

* 1990ல் கேரளத்தின் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.

* வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், பேருந்து கவியரங்கம், தெப்பக் கவியரங்கம், ஆற்றங்கரைக் கவியரங்கம், ரயில் கவியரங்கம், விமானக் கவியரங்கம், மாட்டுவண்டி கவியரங்கம் என்ற பல கவியரங்கங்களை வித்யாசமாக நடத்தி பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார்.

* வீடுதோறும் கல்வெட்டு என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனின் கருத்தும் வரலாறாக வேண்டும் என்பதை வலியுறுத்தி வீட்டுக்கு விடு கல்வெட்டுக்களைப் பதித்து வருகிறார்.

* மனிதன் கடைசியில் மண்ணோடு என்பதால் பிரபலமானவர்களின் பிறந்த மண்ணைச் சேகரித்து, அதற்கு தன்வீட்டில் 'மண்ணகம்' என்று தனியே ஒரு பகுதியை ஒதுக்கிப் பாதுகாத்து வருகிறார்.

* சுரதாவின் கவிதைகள் அனைத்திந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

* சென்னை, மதுரை பல்கலைக்கழகங்கள், கேரள பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய பல்கலைக்கழகம் ஆகிய கல்விக் கூடங்களில் இவரது நுல்கள் பாடநுல்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

* 1989ம் ஆண்டு இந்திய தொலைக்காட்சி தேசிய ஒளிபரப்பில் ஒவ்வொரு மொழியின் சிறந்த கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் பிறந்த, வாழும் ஊர்களுக்குச் சென்று வாழ்க்கை வரலாற்றைப் படம்பிடித்து ஒளிபரப்பினார்கள். அதில் தமிழ்மொழியின் சிறந்த கவிஞர் என்ற தலைப்பில் நாற்பது நிமிட நேரம் சுரதாவின் வாழ்க்கைத் தொகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

* சொற்களைச் சிக்கனமாகக் கையாள வேண்டும் என்ற கொள்கையுடைய சுரதாவின் குடும்பமும் சிக்கனமானதே. இவருடைய மனைவி சுலோசனா அம்மையார். ஒரே மகன் கல்லாடன். கல்லாடனின் மனைவி ராஜேஸ்வரி. பேரக் குழந்தைகள் இளங்கோவன், இளஞ்செழியன்.

* இருபதுக்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நுல்களும் நுறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ள சுரதாவின் வசனத்தில் நான்கு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நான்குமே மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றன.

* இவரது திரைப்பாடல்களில் அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா, கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஆகியவை இன்றும் ரசிகர்களின் இதயச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருப்பவை.

* உவமைக் கவிஞர் சுரதாவின் அனைத்துப் படைப்புகளும் ஒரே தொகுப்பு நுலாக விரைவில் வெளியாகி தமிழிலக்கிய உலகை அலங்கரிக்க இருக்கிறது.

 
Tag : Tamil famous, Famous Tamizhar
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later