New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழக மன்னர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் மன்னர்கள் ( Tamil Kings)
  தமிழ் மன்னர்கள் - ஒரு பார்வை
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
சங்க காலம்:

சங்க காலத்தில் (கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மஹாபாரதமும், ராமாயனமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. ரோமுக்கும் இந்தியாவிற்குமிடையில் பெருகி வந்த வர்த்தகத்தை தாலமி குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது.

பிற்கால மன்னர்கள்:

கி.பி.500க்குப் பிறகு பல்லவர் ஆட்சியைப் பற்றி சான்றுகள் உள்ளன. சுமார் கி.பி.590ல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்று மதுரையை மீண்டும் கைப்பற்றிய பிறகே தமிழ் இலக்கியம், சிற்பம், ஓவியம் ஆகியவை மீண்டும் தழைத்தோங்கியது.

மன்னர்களின் ஆட்சிக் காலங்கள் விபரங்கள்:

பல்லவர்கள் கி.பி.500 - 912 வரை.
விஜயாலய சோழர்கள் கி.பி. 850 - 1071 வரை.
சாளுக்கிய சோழர்கள் கி.பி. 1071 - 1279 வரை.
பாண்டியர்கள் - I கி.பி. 590 - 920 வரை.
பாண்டியர்கள் - II கி.பி. 1187 - 1308 வரை.

 
 
Tag : Tamil Kings , Chola, Pallava, Pandian, Salukya Chola, Vijaya Chola
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later