New Register   -  Login     
Tamil Mozhi - Jokes
 - தமிழ்மொழி முகப்பு » நகைச்சுவை » முட்டாள் ஜோக்ஸ் »
சேனல்கள்
இணைப்புகள்
முட்டாள் ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ் 15
 
அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . .
நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"
நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.
போலிஸ் : டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?
நோயாளி : "டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது."
டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் "எல்லாமே" முடிஞ்சுடுமே."
நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?
போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?
ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.
 
பின்புறம் ...
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later