New Register   -  Login     
Tamil Mozhi - Jokes
 - தமிழ்மொழி முகப்பு » நகைச்சுவை » முட்டாள் ஜோக்ஸ் »
சேனல்கள்
இணைப்புகள்
முட்டாள் ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ் 5
 
பஸ்ஸ’ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி:
ஒருவர் : இது இராயப்போட்டையா?
மற்றொருவர் : இல்லை தோள்பட்டை.
மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
கோபு : டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா
பாபு : அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.
வேலு : அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..
பாக்கி : ஏன்... என்னாச்சு?
வேலு : இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு
பாக்கி : உன் வயது பதினெட்டுதானே
ரமனன் : எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
பாக்கி : ஓர் அரை லூசின் வயது ஒன்பது
சித்ரா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
கோபு : சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.
ஒருவர் : நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை
மற்றொருவர் : நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை
 
பின்புறம் ...
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later