| ராமு-சோமு ஜோக்ஸ் 2 |
|
 |
ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?
சோமு : தை. |
ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
சோமு : என்னாச்சு?
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே |
ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?
சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார் |
ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
சோமு : எப்படி?
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு. |
ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
சோமு : எப்படி?
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா.. |
ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?
சோமு : லோன் லோன்-னுதான் |
சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,,
ராமு : எப்படி சொல்றே ,,,,, ?
சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே |
ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ?
சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க .. .. |
| |
|