New Register   -  Login     
Tamil Mozhi - Jokes
 - தமிழ்மொழி முகப்பு » நகைச்சுவை » சர்தார்ஜி ஜோக்ஸ் »
சேனல்கள்
இணைப்புகள்
சர்தார்ஜி ஜோக்ஸ்
சிறந்த டிரைவர்..?
 
 
- குஷ்வந்த் சிங்
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

 
பின்புறம் ...
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later