New Register   -  Login     
Tamil Mozhi - Ladies Part
 - தமிழ்மொழி முகப்பு » பெண்கள் பகுதி » சமையல் குறிப்புகள் » செய்முறை »
சமையல் செய்முறை
மில்லன் ஹார்ட் பிஸ்கெட்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 100 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 50 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
உப்பு - 1 சிடடிகை
எசன்ஸ் - சில துளிகள்
அஸ்கா சர்க்கரை குருணை - 2 ஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

* முட்டையை அடித்துக் கொள்ளவும். மைதா மாவை சலித்து உப்பு சேர்க்கவும்.

* வெண்ணெய் சர்க்கரைப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* இதில் அடித்து வைத்துள்ள முட்டை 2 ஸ்பூன், மைதா மாவு இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து மிருதுவான உருண்டையாகப் பிசைந்து கொள்ளவும்.

* 1/4 இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல தேய்த்து பிஸ்கெட் கட்டரில் ஹார்ட் வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

* நெய் தடவிய டிரேயில் பரவலாக பிஸ்கெட்டை அடுக்கி மீதமுள்ள முட்டையை, தட்டையான ஸ்பூனால் அதன் மீது சமமாகத் தடவி, குருணை சர்க்கரையையும் மேலே தூவிக் கொள்ளவும்.

* ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் சில நிமிடம் பேக் செய்யவும்.

 
 
 
சேனல்கள்
இணைப்புகள்
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later