| உதிரத்தினால் கருவாகாமல்
உக்கிரத்தினால் கருவானவன் !
தசைகளினால் உருவாகாமல்
தமிழினால் உருவானவன் !
கவிச்சக்கரவர்த்தி,கவிப்பேரரசு,கவியரசு
வரிசையில் கவிக்கடவுள் !
"பா" ரதத்தின் "பா" ரதி !
பாவலர் இனத்தின் சாரதி !
மனுதர்மத்தை மாற்றிய தமிழ் நீதி !
அந்நியரை எதிர்த்த இந்திய ஜோதி !
மண்ணில் உலாவந்த கதிரவன் !
தமிழ்க் கவிஞர்களின் புதிர் அவன் !
தமிழ் அகராதியின் 19ம் நூற்றாண்டுப் பதிப்பு !
அவன் புகழ் பாடுவது எங்களுக்குச் சிறப்பு !
|