New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
கவிதை தொகுப்புகள்
உனக்கு நான்..... எனக்கு.........????
 
உனக்கு நான்..... எனக்கு.........????

அரங்க.இதயம்.கிருஷ்ணா
90, கடைவீதி, தியாகதுருகம்-606 206.
கள்ளக்குறிச்சி வட்டம். விழுப்புரம் மாவட்டம்.
 

 

 

[1] [2]


காற்றில் நான்....

நான்
சேகச்சுமைகளை
சுமந்துகொண்டே
பிறந்தவன்.

விதியின் வலையில்
வீழ்ந்து,
விழியின் நெருப்பில்
எரிந்து,
சாம்பலாய் காற்றில்
சங்கமித்து விட்டேன்.

நான்
நத்தையின் நண்பன்
ஆம்
சோகங்களை
சுமக்கும்போதெல்லாம்........

இதயத்தை
உழுதுவைத்தேன்
ஏதேதோ விதை விதைத்து
கன்விழித்து பார்த்திருந்தேன்
கதிர்விளைய காத்திருந்தேன்.
விளைந்தது,

அறுத்தது ஒருவன்
சுவைத்தது ஒருவன்
வைக்கோளாய்
வதைபட்டது மட்டும்
நான்.

சுவாசத்தை தேடி....

கல்லுக்குள்
காதல் தேடினேன்
காணலுக்குள்
கவிதை பாடினேன்,
கிடைத்தது காதல்
இதயம் இறந்தபின்
கிடைதத்து கவிதை
விழிகள் இழந்த பின்.....

கை காட்டியவள்
அவள்,
காயப்பட்டது மட்டும்
நான்

அவள் நேசிக்கிறேன்
என்றபின்தான்,
நான்
சுவாசிப்தாய் சொன்னேன்.
இதோ இன்று
என் சவாசத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.......

கிடைக்காதென்று
தெரிந்தும்
யாரிடமோ தொலைத்துவிட்டு
யாரிடமோ
தேடிக்கொண்டிருக்கிறேன்.......

இங்கே இதயங்கள்கூட....

மலரினமோ
நான்
வேண்டுமென்றால்
சூடிக்கொள்ள
வேண்டாமென்றால்
வீசிவிட.....

வாழ்க்கையில் - நான்
வாழ்வேனா?
இல்லை - வழுக்கி
வீழ்வேனா?

எதற்காக நான்
வாழவேண்டும்?
ஏலனப்பேச்சுகளில்
எரிந்துபோகவா?
இல்லை - அவளின்
இறக்கமற்ற பார்வையில்
இறந்துபோகவா?

நான்
வாழ்ந்துகொண்டிருப்பது
மனிதர்களோடா?
எனக்குள்
எண்ணற்ற சந்தேகங்கள்...

இங்கே....
இதயங்கள்கூட
அடகு வைக்கப்டுகின்றனவா?
இல்லையென்றால்-ஏன்
அவதூரு பேச்சுகளுக்கு-தினம்
அடிக்கல் நாட்டப்டுகிறது

நெஞ்சத்தில் நெருப்பாய்....

ஓர் நாள்
எழுதப்ட்ட கடிதம்
எறியப்பட்டது
வடிக்கப்பட்ட கவிதை
வதைக்கப்பட்து
மனதுகுள்
செதுக்கப்பட்ட சிற்பம்
சிதைக்கப்பட்டது
அப்டியென்றால்
முந்தைய ஆண்டுகளில்
நான்
முழ்கி இருந்தது,
இல்லை.....இல்லை....
முழ்கி இறந்தது
அவள்
இதயத்திலா?
இல்லை
இதழ் சிரிப்பிலா?

என்
இதய தூசுகளை
ஒட்டடை அடிக்கத்தான்
அவளை
நேசித்தேன், நேசித்தவள்
நெஞ்சத்தில்
நெருப்பானாள்.

நெருப்பென்னை
சுடவில்லை
அவள்
நேச விழிகள்தான்
என்னை.....

சுடும்போது
வலிக்கவிலை
சுட்ட வடுக்ளை
சுமகும்போதுதான்......

உனை விட்டிலாய்
சுற்றிவந்தேன்
நீ
விளக்காய்
சுட்டுவிட்டாய்

என்னை
ஏமாற்றியவள்மீது
எனக்கு கோபமில்லை
ஏமர்ந்து போன
என்மீது மட்டுமே....

தொலைந்துபோன
என் முகவரியை
தோண்டியெடுத்து
தூய்மைப்படுத்துவது மட்டுமே
எனது நோக்கம்
அதற்காக,
எத்தனைச் சுமைகளையம்
சுமக்க
என் முதுகை
தட்டிக்கொடுத்து
தயார் செய்துவிட்டேன்.....

நிறம்மாறா நினைவுகள் ....

இது இடிந்துபோன
இதயம்
மடிந்துபோன
மனது
ஆயினும்-அதில்
என்றும் மாறா(த)து
உன் நினைவு.

உன்
இதய இடுகாட்டில்
என்
காதலுடல்
எாக்கப்படது
எரியும் நெருப்பிலும்
என் இதயம்
உன் பெயரையே
ஒலிக்குது

காதல் நதியில்
நீந்தக் குதித்தேன்
கால்களை
வெட்டிவிட்டாய்
கண்ணீர் வடித்தேன்
கைகள் போதும்
நீந்திடுவேன்
கண்ணே
ஓர்நாள்-உன்
காதல் நெஞ்சில்
சோந்திடுவேன்

நெஞ்சோடு சாய்ந்த நிமிடங்கள்....

உன்
உள்ளம் உணராமல்
உருகினேன்
நெஞ்சம் அறியாமல்-நெருப்போடு
கருகினேன்.

ஏன் என்னை
தூக்கி எறிந்தாய்?
இதயத்தைக்
கசக்கிப்பிழிந்தாய்...

உன்னோடு பழகிய
சிலகாலம் போதும்
என் கண்ணோடு-காதல்
அலைவந்து மோதும்...

என் நெஞ்சோடு சாய்ந்த
நிமிடஙகள் போதும்
அந்நினைவோடு-என்னுள்ளம்
பல்லாண்டு வாழும்.....

நான் நேசமலாகளை
தொட்டு பறித்தேன்-நீ
தட்டிப்றித்தாய்
செத்தும் தடித்தேன்

நான் நதியில் வீழ்ந்திருந்தால்
நீந்தியிருப்பேன்
உன்
விழியிலல்லவா
வீழ்ந்துவிட்டேன்

உயிரோடு....

சோகத்தை
சுமக்கும் தோள்களுக்கு
சந்தோசத்தின்
சரித்திரம் தெரிவதில்லை
தாகத்தை
இழந்த உணாவுகளுக்கு
தண்ணீரின்
சுவை புரிவதில்லை

என்னவளே
மறந்துவிடாதே
உன்
விரல் நகத்தில்
என்
விலாசத்தை
எழுதியிருக்கிறேன்
என்
கருவிழிக்குள்
என்
கவிதையைக்
கலந்திருக்கிறேன்

யாருக்கும்
தெரியாமல் கொடுத்த
என் இதயத்தை
ஊருக்க நடுவிலே
உதறிவிட்டாய்
உயிரோடு
எனை ஏன்
எரியவைக்கிறாய்?

இறக்காமலே....

இறககாமலே
புதைக்கப்பட்ட
என் இதயம்
என்னை ஏமாற்றிவிட்டது
ஆம்
இறுதிவரைப்போராடும்
என நினைத்தேன்
உறுதியின்றி
உடைந்துபோனது

என்
இதயம்
நெருப்பையம்
நெடுநாள் சுமக்கும்
நீயின்றி
ஓர்நாளும் துடிக்காது
அதனால்தான்
உடைந்து
உருக்குலைந்து போனதோ.....

தவறுகள் உனது
தண்டனைகள்....

பெணணே
எதற்காக
எனை வெறுத்தாய்
அழகில்லை என்றா?
உடலழகை
உணர்ந்தவளே
உள்ளழகை-என்று நீ
உணரப்போகிறாய்?

கங்கையிலும்
குளித்துவிட்டேன்-என்
கருமைநிறம்
போகவில்லை-எனக்கு
காரணமும் புரியவில்லை

இந்தக்
கருமை மேகத்தில்
காதல்மழை பொழிந்ததைக்
கையில்பிடித்துக் குடித்தாய்
கருப்பில் பிறந்தமழை
இதுவென்று
காலால்
எட்டியா உதைத்தாய்?

தவறுகள்
உனதாயினும்
தண்டனைகள் மட்டும்......

இதயத்தை மட்டும்....

உன்
விழிபார்த்தபின்
நான்
வழிமாறிப்போனேன்
கொஞ்சம்
நெஞ்சம் தடுமாறிப்போனேன்
வஞ்சம்
நீ ஆற்றிக்கொண்டாய்
வலியை
நானேற்றுக்கொண்டேன்

உதிர்ந்த
உன் முத்துக்ளை
உள்ளத்தில்
சேர்த்துவைத்தேன்
இழந்த என்
இதயத்தை மட்டும்
மீட்க மறந்துவிட்டேன்
எழுத்தில்
பிழை இருக்லாம்
என்
இதயத்தில்
பிழை இல்லை
இருந்தும்-என்
இரத்த அனுக்களை
சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்
உனக்காக.......

திறைமறைவில்....

அவள்
விழியில் வாழ்கிறேன்
அவள்-வரும்
வழியில் வாழ்கிறேன்
அவள்
இமையில் வாழ்கிறேன்
கொஞ்சும்
இதழில் வாழ்கிறேன்
அவள்
இதயத்தில் மட்டும்......

என்னவளே
திறைமறைவில்
நீ தீட்டும்
விடுகதைக்கு விடை
நான் என்பதை
ஓர்நாள் நீ
உணர்வாய்
அதுவரை நான்
அழியாமல் இருப்பேன்
நிச்சயம் இருப்பேன்

ஆம் வற்றிப்போன
நதிகளில்
நாணல்களாய்
நான்.....

மழைத்துளிகளின்
எதிர்பார்ப்பில்
மெளனத்தில்
நான்.......

காத்திருப்பேன்
நிச்சயம்
காத்திருப்பேன்........

ஓ காதலே....

அவளின்
எரிக்கும் பார்வையை
ஏற்க இருவிழி
எனக்குப் படைத்தான்

அவளின்
சீரில்லா வாாத்தையை
சேமிக்க இருசெவி
எனக்குப்படைத்தான்

அவளை
செதுக்கிவைத்த
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றோடு
நிறுத்திவிட்டான்......

ஏற்க மறுத்த
இதயத்தில்
இடம் தேடினேன்
இனறும் அவள்
இதயத்தில்
அழகற்று அசிங்கமாய்
நான்......

ஓ....... காதலே
நான்
தோல்விக்காகத்தான்
காதலிக்கிறேனா?

காதல் புலம்பல்....

நான்
காதலை நேசித்தேன்
கவிதை வருமென
தெரியாமலே.....

நான் கவிதையை நேசித்தேன்
அது
காதல் தோல்வியின்
புலம்பலென்று
புரியாமலே

அதனால்தான்
தொலைக்காத ஒன்றைத்
தேடினேன்
தொலைத்தபின்
வாடினேன்......

ஆம்
கிடைக்காதவொன்றைத்
தேடினேன்-அது
கிடைக்குமென்றுதான்
ஓடினேன்

கிடைக்காதது
கிடைத்தது
கிடைக்குமென்றது மட்டும்
கிடைக்கவேயில்லை.......

இன்று.....எனக்கு....

இன்று
எனக்கு பதவியேற்புவிழா
அண்ணன் என்ற
அரியாசனத்தில்
அமரப்போகிறேன்
அவள் இதயத்தில்
விழாவை
அவள் கொண்டாடினாள்
அரியாசனத்தில்-நான்
அமராமலே.......

எனக்குத் தொயாது
நான்
அவளின்
மேலாடையாக மட்டுமே
இருந்தது
சுழற்றி எறிகையில்தான்
புரிந்தது.....

அவள்
என்னை ஏமாற்றவில்லை
பாவம்
நான்தான்
ஏமார்ந்துவிட்டேன்.....

நான் குறித்த நல்ல நாட்கள்....

விழாக்களில்
வீதிகளில்
அவள்
விழிகளைத்தேடினேன்

அவைதான்
என் அழிவிற்கு
நான் குறித்த
நல்ல நாட்கள்...

என்
இதயத்தை
ஊருக்குத்தெரியாமல்
உனக்குக் கொடுத்தேன்-அது
உனக்கும் தெரியாமல் போனதால்
என்னுயிரே
என்னையழிக்கும்
கதியானாய் நீயெனக்கு
நிகழுமோ இது
நிகழ்த்துவாயோ நீயும்....

இதயமே.....
இல்லாதவளை....

மலராத பூ
மலர்ந்ததாய்
மகிழ்ந்துபோனேன்
மடிந்துவிட்டேன்
உதிர்ந்தபின்

எத்தனை நாள்
உறக்கத்தை இழந்திருப்பேன்
உன்னை நான்
காதலிக்கிறேன் என்று சொல்ல......

காதலெண்ணங்கள்
காகிதத்தில் கவிதையாகின
கிழத்துவிடாதே என்று சொல்லித்தான்
கிடைக்கச்செய்தேன் உனக்கு
கேட்கவில்லையே-நீ
என்னையென்று
நினைத்துக்கொண்டு
உன்னையமல்லவா
கிழித்துக்கொண்டாய்....

நான் காகிதம்
நீ
அதிலெழுதப்பட்ட கவிதை
ஆம் கண்ணே
நீ
என்னில்
எழுதப்பட்டிருக்கிறாய்

கிழிக்கப்ட்ட காகிதம்
கேட்டது என்னிடம்
இதயமே இல்லாதவளை
எப்படி நீ.......... என்று?

தெரியாதா?.... உனக்கு........

அவளிடம்
தொலைப்தற்கென்றே
படைக்கப்பட்டதா?
என் இதயம்.....

இனியவளே
சுமப்வர்களுக்குத்தான் தெரியும்
சுமையின் பாரம்
இழப்வாகளுக்குத்தான் தெரியும்
இழப்பின் துயரம்...

பாரங்களை
சுமக்கசொல்வது மட்டும்-நீ
சோகங்களை
சுமாந்து நிற்பவன்
நானல்லவா.....?

எனக்குள்
சொல்லமுடியாத சோகம்
சொல்லிமுடிந்தும் பாரம்.....

தேடலின் உன்னதம்.....

உன்னோடு
கடல் மணலில்
கைகோர்த்து நடப்பது
என் நோக்கமல்ல....
உன்னிடம் இழந்துவிட்ட-என்
இதயத்தை
மீட்பது மட்டுமே......

இழந்துவிட்ட
இதயத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்
தேடலின் உன்னதம்
தெரியுமா? உனக்கு....?
அதை
அறியும் நாள்
அருகில் இருக்கு......

சுமைதாங்கியாய்.....

நீ
சுடும்முன்
என்னை
நானே
சுட்டுக்கொண்டேன்
ஆம்
பூவை மட்டுமே
தீண்டும்
உன் கைகள்
தீயைத்தீண்டலாமோ...

எத்தனை முறைவேண்டுமாயினும்
என் இதயத்தைச்
சுட்டுக்கொல்வேன்
என்னவளுக்காக....
ஏன் தெரியுமா?
எழுதப்படாதக்
கவிதைக்கு தொடுக்கப்படாத
வரிகள் நான்.....

வெட்டப்பட்ட மரத்தில்
பழுக்கத்துடிக்கும்
காய்காள் நான்....

என்னை நான்
மரமென்றுதான் சொல்லிக்கொள்வேன்
ஏனென்றால்
என் நிழலில் நீ
நடுவெயிலில் நான்......

வாழாத வாழ்க்கையில்
தொலைந்துபோன பக்கங்களைத்
தேடி....தேடி...
தேய்ந்துபோனேன்
இழக்கமட்டுமே
தெரிந்த எனக்கு
இன்றுவரை-எதையுமே
மீட்கத்தெரியவில்லை.....

வாழ்க்கையின்
அத்தியாயத்தை சற்று
வாசித்துப்பார்க்கிறேன்
சேகங்களை மட்டுமே
சுமந்திருக்கும்
சுமைதாங்கியா.....கவே.....நான்

இடுகாட்டில்.....

உன்னால்
நான் செல்லும் பாதையில்
சிலரின்
ஏளனப்பேச்சு
சிலரின் ஏக்கப்பார்வை
என்னுள் எழுந்தது கேள்வி
எதற்கிந்த பயணம்.....
டைகளைத்தேடி
விரைந்தேன்
முன்னுக்குப்பின் முரணாக
எத்தனையோ பதில்கள்
ஏற்றத்தாழ்வுகளை
ஏற்றுக்கொள்ள
என்னால் இயலவில்லை.....

என்னுள்ளம்
சிரித்ததை
நீ அறிவாய்
சிதைந்ததை
நீ......?

என் நெஞ்சம்
நெகிழ்ந்ததை
நீ அறிவாய்
நெருப்பில் எரிந்ததை
நீ......?

என் இதழ்கள்
மலகதந்ததை
நீ அறிவாய்
மடிந்ததை
நீ......?

என் இதயம்
துடித்ததை
நீ அறிவாய்
தூளாய் வெடித்ததை
நீ..........?

என் விழியின்
விடியலை
நீ அறிவாய்- அது
இருண்டதை
நீ...........?

என் கவிதையை
நீ அறிவாய்
அது சிந்தும்
கண்ணீரை
நீ...........?

நீ
நானாக இருந்ததை
நீ அறிவாய்
நான்
தாளாக இறந்ததை
மலரே
நீ அறிவாயா....?
அறிவாய்
என் மரணத்தில்
நீ மாலையாகும்போது.....

விரைவிலேயே
நீ சிந்திப்பாய்
விட்டெறிந்த
என் இதயத்தை-ஓர் நாள்
சந்திப்பாய்
அதுவரை-என்
இதயம் ஈடுகாட்டில்கூட-உனை
எதிாநோக்கிக்
காத்திருக்கும்.......

காகித கப்பல்.....

உன்னைப்பொறுத்தவரை
காதல்
கண்களில் தோன்றி
இதயத்தில் முடிவது

என்னைப்பொருத்தவரை
காதல்
உணாவுகளில் தோன்றி
ஊமையாய் இருப்பினும்
உண்மையாய் வாழ்வது

உன்னைப்
பார்த்திருக்கக்கூடாது
பார்த்துவிட்டேன்
பேசியிருக்கக்கூடாது
பேசிவிட்டேன்
பார்த்தபோது
பார்வையை தொலைத்தேன்
பேசியபோது
வார்த்தையைத் தொலைத்தேன்
இதையெல்லாம் விடு
என் இதயத்தையுமல்லவா
உன்னிடம்...........

உன் பஞ்சுக்கரத்தால்
என்
பிஞ்சு இதயத்தைப்
பிழிகின்றாய்
ஒழுகும் என்
இரத்தத்தில்
காகித கப்பல்விட்டு
மகிழ்கின்றாய்......

இதயத்தின் எச்சரிக்கை.....

நீ
என்னைக்
கொல்லவில்லை
ஆனாலங்கு
கொண்டுசெல்கிறாய்

நீ
என்னைத்
தள்ளவில்லை
ஆனால்
தவிக்கவைக்கிறாய்

சாலையோரப்
பார்வைகள்
சலனமற்ற
வார்த்தைகள்
என்
இதயதுடிப்பு மட்டும்
என்னை எச்சரித்தது
அவள் தகுதிக்கு
நீ....... என்று....

உணராமல்
உனை நாடினேன்
இன்று
உறவில்லை
தடுமாறினேன்....

வார்த்தைகளற்ற வரிகள்.....

நடு இரவில்
நானெழுந்து
நட்சத்திரத்தைக் கேட்டேன்
இழந்த
என் விலாசத்தை
எழுதித் தரும்படி

வாங்கிவந்தபின்
வாசித்துப் பார்தால்
வார்த்தைகளே இல்லாத
வரிகளும்
எழுத்தே இல்லாத
விலாசமும்
எழுதப்பட்டிருந்தது

நேசிக்கத்தெரியாத
நெஞ்சத்தில்
வாசிக்கமுடியாத
வரிகளை வாங்கிவந்தேன்
வேதனைகளை விலைபேசி
வீட்டுக்குள் இட்டுவந்தேன்
வேதனைகள் விலங்கிட
சோகங்களைச்
சுமர்ந்து நின்றேன்.....

கூந்தல் பூக்களாய்.....

அட
நிலவுக்கு
சுடத்தெரியுமா?
அவள்
சுட்டுவிட்டாள்

மலருக்குக்
கோபம் வருமா?
அவள் கோபப்பட்டாள்

அவள்
கண்னுக்கு
மையாக இருந்திருக்கிறேன்
காதலில்
பொய்யாகிப் போய்விடுவேனோ?

உன்
பாதச்சுவடுகளில்
பதிந்துவிட்ட-என்
இதயத்துடிபுகளைத் தட்டி
எழுப்புகிறேன்
எழ மறுக்கிறது
உன் ஏமாற்று
இதயத்திலிருந்து.....

உன்
கூந்தல் பூக்களாய்
உதிர்ந்துவிட்டேன்
கொஞ்சும் வார்த்தையில்
மடிந்துவிட்டேன்.......

தயவுசெய்து
உன்
காந்தப்பார்வைக்கு
காவலிடு
இல்லையேல்
காலையர் இதயத்தைக்
காயப்படுத்திவிடும்........

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later