New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
கவிதை தொகுப்புகள்
உனக்கு நான்..... எனக்கு.........????
 
உனக்கு நான்..... எனக்கு.........????

[1] [2]

 

சுவாசத்தை.....

யாரோடு
பேசநினைத்தேனோ-அவள்
வேரோடு வெட்டிவிட்டாள்

நீ
விட்டெரிந்த இதயத்தில்
சிறு விரிசல்
நான்
ஒட்டிக்கொண்டிருக்கிறேன்
மீண்டும் உன்னைவைத்தே.....

என்
இதயத்தில்
அன்று
அசைபோட்ட நினைவுகள்
இன்று
உள்ளத்தை உறுத்திக்கொண்டு......

நீ
நேசம் வைத்த
நெஞ்சத்தின்
சுவாசத்தைச்
சூன்யமாக்கியவள்.....

இறுதிப் பயணத்திலாவது.....

எனன்வளே
உன் பார்வைக்கு
நான்
பொதிசுமக்கும் கழுதைதான்
ஆம்
உதைக்கத்தெரியாமல்
உன்
நினைவுகளை மட்டுமே
சுமக்கத்தெரிந்த......

நாற்பது வயது
நரைத்முடி
உன் அழகு
அளவிற்கதிகம் ஆளப்பட்டு
நீ
அசந்துபோயிருப்பாய்
அன்றும்
உனக்கேற்ற அழகன்
நானில்லையென்று
உன்னுள்ளம்
உனகுணாத்தும்

அந்த
உள்ளத்தை ஒதுக்கிவிட்டு
உணர்வுகளை வெளிக்காட்டு
இறுதிப்பயணத்திலாவது-நாம்
இதயத்தை
இடம் மாற்றிக்கொள்வோம்.....

சிதறிப்போன இதயம்.....

நான் கடல்
நீ தோணி
என்னைக் கடந்துவிட்டாய்
வேறொருவனை ஏற்றிக்கொண்டு

என் மீது
பயணம் செய்துவிட்டு
நன்றியை
அவனுக்கு செலுத்திவிட்டாய்

இன்னொருமுறை
வரும்போது-வெறும்
தோணியுடன் வா
நானே
அலையாகி-உன்னை
அழைத்துச்செல்கிறேன்.....

உன்
நாணயமற்ற பார்வையில்
நான்
செல்லாக்காசாய்
சிதறிவிட்டேன்

சிதறியக் காசை
சேமிக்கவில்லை
சேமித்த இதயத்தை
சிதற விட்டேன்.....

அவள்
என்னை
ஏற்றுக்கொண்டேன்
என்றபின்....

யாருக்குத் தெரியும்
நாளை
அவள்
மாறலாம்

இன்றே
இந்த நிமிடம்கூட
மாறலாம்...

எத்தனைக்காலம்தான்
அவள்
அழகைமட்டுமே
ஆட்சி செய்துகொண்டிருப்பாள்
ஓர்நாளேனும்
அன்பு வேண்டுமல்லவா?
அன்று என்னை
நாடி வருவாள்
என் இதயத்தை
தேடி வருவாள்.....

பாவம் அவள்
உலகத்தை இன்னும்
உணரவில்லை
பக்குவப்பட்டவர்கள்
பார்த்தால் சொல்லுங்களேன்
அவளுக்கு.........

பணமும்......
அழகும் ............
............... என்று

அவள் நினைப்பதை.....

அவள்
எதை நினைக்கிறாளோ
அதையே நான்
செய்கிறேன்....

அவள்
எறிகிறாள்
நான்
விழுகிறேன்....

அவள்
கண்ணசைத்தாள்
நான்
காணாமல் போனேன்

அவள்
மேகமாய் குளிாந்தாள்
நான்
மழையாய்க் கரைந்தேன்.....

அவள்
கண்கலங்குவாள்
நான்
கண்ணீராய்க் கசிவேன்.....

ஆம்
அவள்
எதை நினைக்கிறாளோ
அதையே நான்
செய்கிறேன்.....

நான்
இதுவரை
சந்தோசத்தை
சந்திக்கவேயில்லை

இழப்புகளைமட்டுமே
இறைவன்
எனக்கென
எழுதிவைத்தான் போலும்...

நீ
எவரோடு வேண்டுமானாலும்
வாழ்ந்துகொண்டிரு
எவரோடு வேண்டுமானாலும்
பேசிக்கொண்டிரு
ஒரே....ஒருமுறை
எப்டியிருக்கிறாய்
என்று என்னை கேள்
அதுபோதும்-என்
ஆயுள் முழுதும்....

வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப்போகும்
என்றார்கள்-ஆனால்
இதுஎப்படி?
நீ
வாய்விட்டு சிரித்தாய்
நான்
காதல் நோய்பட்டுபோனேன்.....

பூவும்.....புயலும்.....
 

இதழ்கள்
தீ சிந்தக்கண்டேன்
நீ
சிந்தும் தீயில்
இதயம்
தீக்கிரையாக்கி நின்றேன்....

கணவுகள் என்னை
கைது செய்தன
விழிகள் அதற்கு
விலங்கிட்டன.....

வாசம் வீசும்
பூக்கள் உண்டு
புயலை சுமக்கும்
பூக்கள் உண்டா?

நீ
புயலை சுமக்கிறாய்
என்னை
தூசாய் எறிகிறாய்....

நான்
மலருக்குத்தான்
மடலெழுதினேன்
முட்களேனோ?
முன் வந்ததது......

நான்
விண்மீன்களைத்தான்
விலைபேசினேன்
இடியையேனோ?
ஏற்றுக்கொண்டேன்.....

அவளால்.....

காதலெனும் போர்க்களத்தில்
உன்
விழியெனும் வீச்சாவாள்
என்
இதயத்தைக் கூறுபோட்டது....

உன்
கனவெனும்
கசாப்புக்டையில்
என்
கழுத்து
திருகியெறியப்பட்டது....

என்னுயிரே
இருண்டுகிடக்கும்
என்
இதயக்கிழக்கு வெளுக்கட்டும்
தயவு செய்து
சூரியானய் சுழன்று வா.....

ஓ..... நண்பனே....
இதுவரையில்லையாயினும்
இனியாவது
காதலித்துப்பார்
அதன்
சுகமும் புரியும்
சுமையும் தெரியும்......
நான்
பிறவிக்கவிஞனல்ல
பிற்பாதியில்தான்
கவிஞனானேன்
இல்லை....இல்லை.....
அவளால்
கவிஞனாக்கப்பட்டேன்.....

உன் நினைவுகளோடு.....

ஊருக்குவெளியே
யாருக்கும் தெரியாமல்
எத்தனையோமுறை
பேசியிருப்போம்....

பேருந்துநிருத்ததில்
பேசாமல் மயக்கத்தில்
எத்தனை நாள்
ஏங்கியிருப்பேன்......

எதற்காக
எனைப்பிறிந்தாயோ?
எனக்குத் தெரியாது
நீயன்றி ஒருவளை
நெஞ்சில் சுமக்க
இனி என்னால் இயலாது....

வாழ்வோ,
சாவோ
உன் நினைவோடு
ஒதுங்கிவிடுகிறேன்....

என்றென்றும்
நானழுதேனும்
உன்னை
சிரிக்கவைப்பேன்
கொஞ்சம்
சிந்திக்கவும் வைப்பேன்
என்னைப்பற்றி.....

நான்.....இன்னும்.....

என்
சந்தோசத்திற்கு
நீ
சரணமெழுதவேண்டாம்
சோகங்களுக்கு
சுரம் மீட்டாமலிரு
அது போதும்....

உனக்கு
ஞாபகமிருக்கிறதா?
உன்
இதயப்பக்கங்களை
எடுத்துப்பார்
எங்கேனும்
என்னைப்பற்றி
எழுதியிருப்பாய்...

நீ
அட்சயப்பாத்திரமாக இருந்தும்
நான்
இரந்தும்
இன்னும் நிரப்பப்படாத
பிச்சைப்பாத்திரமாகவே....

நினைவைத்தேடி.....

எதற்காக
என் பிறந்தநாளை
எழுதிகேட்டாய்-நான்
இறக்கும் நாளை
எழுதுவதற்கா?

ஒன்றைமட்டும்
உனக்கு
உணர்த்த விரும்புகிறேன்
எனக்கு
இறப்பே இல்லை
உன்
இதயத்தில் இருக்கும் வரை....

நீ
எந்த ஊருக்கு
சென்றாலும்
உன் சொந்த ஊர்
என் இதயம்தான்....

நான்
உணவைத்தேடி அலையவில்லை
தொலையந்துபோன
உன்
நினைவுகளைத்தேடி.....

பாதச்சுவடுகள்.....

இனியவளே
கோபித்துக்கொள்ளாதே
உன்
கோவிலோரம்
ஒரு
குப்பைத்தொட்டியாய்
இருந்துவிட்டுப்போகிறேன்......

நீ
எடுத்தெறியும்
எந்தகுப்பையையும்
என் இதயம்
ஏற்றுக்கொள்ளும்
ஏனென்றால்
நானும்-உன்னால்
எறியப்பட்டவனல்லவா?

உன்
பாதங்களைத்
தேடி...த்...தேடி....
தேகமிளைத்துவிட்டேன்
மீதமிளைக்குமுன்
உன் பாதசுவடுகளையாவது
பார்க்கமுடியுமா?

 

உலகம்
நீயென்றேன்
என்
திலகம்
நீயென்றாய்.....

பின்-உன்
ஆசை அடுப்பில்
வார்த்தை நெருப்பிட்டு
என் உயிரை
சுட்டுத்தின்றுவிட்டு
உப்புகர்ரிக்கிறதென்கிறாய்......

கண்ணே
சிரித்துவாழவில்லையாயினும்
செத்துப்போகவில்லை நான்....

நீ
தின்ற உயிரை
திருப்பித்தந்துவிடு
இல்லையெனில்
நடைபிணமாக இருக்கும்
நான்
நடவாப்பிணமாகிவிடுவேன்.....

நான்
உயிர்போக
மண்ணல் மடிவேன்
உன் நினைவுகள்
என்னை
எழுப்பிவிடும்......

அந்த
உன்
நினைவுகளில்
நானுமிருக்கிறேன்
இந்த
நீ-யில்
நானில்லை....

இனி நான்
வாழ்வது கடினம்தான்
ஏனெனில்
என்னை நீ
பலமுறை சாகடித்துவிட்டாய்....

நீ
உயிரோடிருக்கிறாய்
என்பதை நான்
உயிர்போயினும்
உணாவேன்
இஃதுண்மையிலுமுன்மை....

உன்னையே நான்.....

நீ
சாகக்கூடாது
சாகமாட்டாய்
எப்படி நீ
இறந்துபோகக்கூடும்
என் நினைவுகளில்
நீ
நிறைந்திருக்கும்போது....

நீ
சென்னசொல்லை
கனவில்கூட
நினைவுபடுத்தமாட்டேன்
ஆம்
இன்னும்கூட
உன்னையே நான்
உனுலகமே எனக்கு.....

என்னை
நீ அப்படி
நினைக்காவிட்ாலும்
நீ எனக்கு
அப்படிப்பட்டவள்தான்....

உன்னை
உண்மையாய் நேசித்தேன்
நான் செத்தாலும்
இந்த
உண்மையா சாகும்?

கனவெல்லாமே.....

உன்னை நேசிக்கிறேன்
என்றதற்கு
நானும்.... உ...ங்...க...ளை
என்று நீ
இழுக்கும்போதே
வளைந்துவிட்டேன்
உன்பக்கம்....

அப்போது நினைத்தேன்
நீ
எனக்காக பிறந்தவள்
என்னைப் புரிந்தவளென்று
ஓர்நாள்
புரிந்த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......

மனம்
மாறக்கூடியது
காதல்
மாறாதது
எப்போதும்
மாறக்கூடிய மனதில்
ஒருபோதும்
மாறாக்காதல்
என்ன ஆச்சாயம்
மனதை
நிலைப்படுத்தும் காதல்
மங்கையவளை.......

காதலில்
முரண்பாடிருக்லாம்
எனக்கு
காதலியே
முரண்பாடாய்....

காதலில்
முரண்பாடுகளுக்குத்தான்
முக்கியத்துவம் போலும்....

மூச்சுக்காற்றின்.....
முத்திரைகள்.....

உனக்காக
எழுதப்பட்ட
ஒவ்வொருவரியும்
என்
மூச்சுக்காற்றின் முத்திரைகள்

இந்தக்காற்றை
நீ மட்டுமே
உணரமுடியும்
இது
உனக்காகவே வீசுவது
இந்தக்காற்றுக்கு
சுவாசமே நீதான்.......

சுமப்பவன்
நானே
தயாராயிருக்கிறேன்
சுமையாகிப்போக உனக்கென்ன?

உன்னை பிடிக்கும்
அதைவிட உன்
கவிதையைப்பிடிக்குமென்றாயே
என்
வார்த்தை முத்துக்களை
இப்போது
சரமாக்கியிருக்கிறேன்
அணியத்தான்
நீ
தயாராயில்லை......

எனக்குப்
புரியாமல் போய்விட்டது
உனக்குள் இருக்கும் ஒருவனுக்கு
என்னை நீ
ஒத்திகைப்பார்த்தது......

கண்ணீர்க்கயிறு.....

என்
இதயத்திலிருந்து
உன்னை
எவராலும்
இறைக்கிவைக்க இயலாது
உன்னைத்தவிர
அதுவும்
சாவின் மடியில்
நான்
சரணடையும் போதுதான்.....

பைத்தியமே
காற்றைக்கிழித்து
கந்தாலாக்குபவர்
யாரேனுமுண்டோ?

உன்
சொல்லம்புகளால்
என்
மூச்சுக்காற்றை
அதுவும் நீ......

சோகச்சுமை
என்
உயிர்வண்டியில்
ஏற்றப்பட்டிருக்கிறது
கண்ணீரால்
கட்யிழுக்கிறேன்
கண்ணீரே
கயிரானாலும்
நீ மட்டும்....

இன்னும் நீ.....

சாவுக்குட்டையை நோக்கி
சாய்கிறதடி-என்
உயிர்வண்டி
நான்
சாகுமுன்னே
சாரமாக வாராயோ?
இல்லை வாராமல்
இன்னும்
பாரமேற்றிப்போவாயோ?

நான்
வெளிச்சத்தைத் தேடி
விரைகிறேன்
நீ
என்னை
இருட்டினுள்
இட்டுசெல்கிறாய்....

நீ
தீப்பெட்டி
நான்
தீக்குச்சி
உரசிக்கொண்டது
இருவரும் தானெனினும்
பற்றிக்கொண்டது
நான் மட்டும்மே....

என்னை
ரணப்படுத்துபவளும் நீ
குணப்படுத்துபவளும் நீ
இன்னும்-நீ
எனக்கோர் விசித்திரம்தான்....

தங்கையாவாளோ.....

காதல்பாதைக்காட்டியவள்-பின்
இல்லையென்றுசொல்லி-என்
கண்ணைப் பறித்துவிட்டாள்
ஆனால்
காதல்பாதை
என் மனக்கண்ணுக்கு
இன்னும் பிரகாசமாய்.....

உனக்காக நான்
எனக்காக யார்......?
என்ற ஏக்கக்கடலில்
இறங்கியபோது
காப்பாற்றப்பட்டேன்
உன்
காதல் கலத்தால்
காதலை
கலமென்று நம்பி
நானேரியபின்
கலத்தைக்கவிழ்த்து
கடலாழம் காட்டுகிறாய்......

உன்
உறவை முறிக்க
உன்னை
தங்கையாகத் தாழ்த்தி,
புதிய உறவொன்றைப்
புகுத்தினாய்...

நீ
எனக்கென்ன வேண்டும்?
நான்
உனக்கென்ன வேண்டும்?
எனக்கே
எண்ணைத்தெறியவில்லை
தேடிக்கொண்டிருக்கிறேன்.....

ஆம்
துன்பச்சிகரங்களுக்கிடையில்
துகள்களாகிப்போன
என்னை
எண்ணியெடுத்து
தொடுத்துக்கொண்டிருக்கிறேன்......

தத்துவமும்.....
மகத்துவமும்.......

நான்
பச்சைமண்
சிலை செய்வாயோ?
இல்லை-இது
சேறென்று
எடுத்தெறிவாயோ?

என்னைக்
குருடனாக்கு,
செவிடனாக்கு
தயவுசெய்து
உன்னால்-நான்
சீராகும் வேளையில்
சிதறடித்துவிட்டாயே.......
என்னை
நீ
என்ன சொன்னாலும்
என்ன செய்தாலும்
நீயே
எனக்கு தத்துவம்
என் வாழ்வின் மகத்துவம்....

வி‘ஷமும்..... தீர்த்தமாகும்.....

பாவை இதழில்
கோவை பழுத்தது
பார்க்க நினைத்தேன்
விஷத்தைத் தெளித்தது
தெளித்த விஷம்
தீர்த்தமானது
அள்ளிக்குடித்தேன்-என்
ஆயுள் கூடுது......

எனக்கென்று
நீ
எதையும்
இழக்கவேண்டாம்
உன்
தாலிக்கு
என்னை கயிறாக்கு
மஞ்சள் பூசும்போதாவது
தொடுவாயல்லவா...?

நீ
இறக்கின்ற நாளை
எனக்குமட்டும்
எபதிக்கொடு
நான் இறக்கும் நாளை
எமனுக்கு எழுதவேண்டும்....

கல்லறையிலாவது.....

தள்ளாத வயதில்
தடுமாறினும்
உனைத்தாங்குவேன்
உன் மடிமீது
கண்தூங்குவேன்......

என்
இதயம் துடிக்காது
உன்
இமை துடிக்காமல்
கட்டிலறையில்
இடம் வேண்டாம்
உன்
கல்லறையிலாவது
எனக்கு.......

தீச்சுடர்
தீண்டவிடமாட்டேன்
உன்னை
எரிக்கப்போவதில்லை
என்
இதயத்தில்
புதைக்கப்போகிறேன்....

நீ.... நான்.....

உனக்கு
உன்னைப்போல்
தோழியில்லை
எனக்கு
என்னைப்போல்
தோழனில்லை
நமக்கு எனும்போது
நம்காதல்போல் துணையில்லை...

கண்ணையிழந்தான்
கழியைப்பிடித்தான்
நொடியை எண்ணுகிறான்
வயதாகியது
வாழ்நாள் போனது
முடிநரைத்தது
முன்பல் வீழ்ந்தது
மூச்சு நின்றவிடும்
இன்னும் இவனுக்கு
காதல் கனவென்ன?
என்பது நீ
என்காதில் அவை....

நீ
சொல்லும்
அதே நிலைதான் உனக்கும்
அதையே சொல்லவந்தேன்?
நான்
காதலைச் சொல்லிவைத்தேன்.....

திரையில்லை.....

வயதாகிப்போனது
இல்லையென்றா இயம்பகிறேன்
காதல் போகவில்லையே
போகாது
அது
நம்மைப்போல்
பிறப்பதுமில்லை
வளர்வதுமல்லை
வயதாவதுமல்லை
ஆனால்
வாழ்வது
வாய்க்காசி வாங்காதது.....

காதல்
நிலையானது
எங்கும்
நிறைந்திருப்பது
என்னுள்ளும்
நிறைந்துவிட்டது
நீ சொல்லும்
நரையெனும்
திரையா அதை மறைக்கும்......?

காத்திருப்பேன்.....

நான்
என்னையே
என்
காதலையே
கல்யாணம் செய்துகொண்டேன்
ஆனால்
நீதான்....

நீ
என் காதலை
விதவையாக்க விரும்பகிறாய்
அஃக்தென்ன?
உன்னைப்போல் பெண்ணா?
இல்லை
என்னைப்போல் ஆணா?
அது
பேதமற்றது
பகுக்கமுடியாதது
பாகுபாடற்றது
பண்படுத்துவது
நிச்சயமுன்னை
பண்படுத்தும்
என்
கண்ணிலுயிர்
காத்திருக்குமதற்காக....

காதல் சங்கமம்.....

உனக்கு வயதானாலும்
என்னிடத்தில்
எதிர்பார்க்கிறாயே
வாழாதுபோன
வாாநாளையும்
வயதாகாத
இளமையையும்
இவற்றின் தேவை
எனக்கில்லை...

என் காதல்
உன் உடம்பிற்காகவோ?
என் இளமைக்காகவோ அல்ல...
உண்மையான
நம் இதயத்திற்காக.....

என்னைப்பொறுத்தவரை
காதல் சங்கமம்
எண்ணங்களுக்கிடையில்
இதயங்களுக்கிடையில்
காமத்திற்கிடையிலில்லை.....

அன்பே
நான்
காதலை சொன்னபோது
உனக்கது
காமமாய் கேட்டதோ......?

மூச்சு உதிருமோ.....

உன்னால்
காயம் கரைந்தேன்
ஆயினும்
காதலில் மிகுந்தேன்
சைகைகூட
செய்யவில்லை
சேதிசொல்ல வழியில்லை
செவிமட்டும் சிறப்புடன்.....

இதோ-என்
காதலின் கற்பை-வழியும்
கண்ணீரால் கழுவி
மூச்சுக்காற்றில்
ஊதி உலர்த்துகிறேன்......

என்
மூச்சு உதிருமோ?
இல்லை
உன்னில்
காதல் மலருமோ?
மலரும்
மலரத்தான்போகிறது....

னக்கு
நோயும் வரும்
சாவும் வரும்
அதற்குமுன்னே
காதல்வந்ததே
தந்ததும் நீதானே
அதுவேயெனக்கு
நோயெதிர்ப்புசக்தி....

எத்தனை நாள்?
தாகத்திற்கு
தண்ணீருக்குப் பதில்
உன்நினைவைவால்
என் தொண்டைக்குழியை
ஈரமாக்கியது எத்தனை நாள்?
அப்போதெல்லாம் சாகாதவன்
இப்போதா......?

உன்னால்
காதலமுதம் பருகியவன் நான்
ஆலகால விஷமாயினும்
என்ன செய்துவிடும் என்னை?

நொடிப்பொழுதில்.....

இக்கவிதைகளனைத்தும்
என்
எண்ணங்களால்
எழுப்பிய கோபுரங்கள்....

ஒன்றை இடிப்பாய்
மற்றொன்றை கட்டுவேன்
இரண்டை இடிப்பாய்
இன்னொன்றை எழுப்புவேன்

இடித்து.... இடித்து...
ஓய்ந்துபோகும்போது
நீ
சாய்ந்து இளைப்பாற
இதமான இடம்
என் இதயம்தான்......

அந்த
நொடிப்பொழுதில்
நுாறிலொரு பகுதி போதும்
அப்போது-நீ
உணர்வாய்
உணர்ந்தால்
எனக்கதுவே நேர்த்தி
நம்
காதலுக்கு கீர்த்தி.....

என்னென்று சொல்வேன்.....

நீ சொன்னபடியே
வாயில் வார்த்தையில்லை காதுள்
கண்ணீர் இறங்குகிறது
இருக்க....இருக்க...
இறுகுகிறது மூச்சு....

என் கண்ணுள்
உன் காட்சி
எனக்குள்
கத்துகிறேன்
கதறுகிறேன்
என் சப்தம்
என் காதையே அடைக்கிறது
கேட்கவில்லையா? உனக்கு?
ஐயோ.....
இன்னும்
என்னென்று சொல்வேன்
ஏனென்று கேளேன்....

வயோதிகம் வந்ததால்
பாயில் சேயானேன்
பாடைக்கு
ஆளாகிடுவேன் போலிருக்கிறதே.....

ஒருவேளை
உனக்குமுன்
நான் உயிர்விடின்
எனக்குமட்டும்
சவக்குழி மண்ணில்
உனக்கு
என் கண்ணில்......

இன்றும்....
என்றும்...
உனக்கு நான்....
எனக்கு......?????

???......!!!!

இன்று கேள்விக்குறியாய்
இருக்கும் நான்
உன் காதலால்
தலைநிமரும்போது
உனக்குமட்டுமல்ல
இவ்வுலகிற்கே
ஆச்சாயமாகத்தான் தோன்றுவேன்......

 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later